சீரியல் நடிகருக்கு தூக்கத்திலேயே மாரடைப்பு! விஜய் டிவி பிரபலம் அதிர்ச்சி மரணம்!

Published : Apr 12, 2025, 06:35 PM IST

சின்னத்திரை சீரியல் நடிகர் பிரபாகரன் உயிரிழந்துள்ள சம்பவம்  ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

PREV
14
சீரியல் நடிகருக்கு தூக்கத்திலேயே மாரடைப்பு! விஜய் டிவி பிரபலம் அதிர்ச்சி மரணம்!

மனோஜ் மரணம்:

கடந்த மாதம் பிரபல நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜாவின் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், இழப்பில் இருந்து சின்னத்திரம் மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் வெளியே வருவதற்கு முன்பே அடுத்தடுத்து, சில பிரபலங்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளது, பேசு பொருளாக மாறி இருக்கிறது.

24
Sridhar death

சஹானா ஸ்ரீதர்:

கடந்த வாரம், விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லமா சீரியலில் நடித்த, பிரபல நடிகர் சஹானா ஸ்ரீதர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரை தொடர்ந்து,  கடந்த 15 வருடங்களாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் குணசித்ர வேடத்தில் நடித்த பிரபலமானவர் பிரபாகரன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

34
Prabhakaran Death

பிரபாகரன் மரணம்:

 62 வயதாகும் இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பனிவிழும் மலர்வனம்' தொடரில் நடித்திருந்தார்.   தற்போது ஜீ தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் 'கெட்டி மேளம்' தொடரிலும் நடித்து வருகிறார். சூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்த பிரபாகரன், இரவு உணவு அருந்திவிட்டு தூங்கச் சென்ற நிலையில், தூங்கிக் கொண்டிருக்கும்போதே இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அருகே உள்ள மருத்துவமனைக்கு அவருடைய குடும்பத்தினர் அவரை அழைத்து சென்ற நிலையில், இவரை சோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இவர் இறந்து விட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தனர்.

44
Increased Heart Attack Death:

அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்:

 இவருடைய  மரணம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீரியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை முகலிவாக்கத்தில் வசித்து வரும் இவருக்கு, மனைவி மற்றும் ஒரே ஒரு மகள் மட்டுமே உள்ளார். இவருடைய மகள் தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து சின்னத்திரை பிரபலங்கள் மாரடைப்பால் உயிரிழந்து வரும் நிலையில், அவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக உள்ளதா? நன்றாக இருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட காரணம் என்ன என்பது போன்ற பல கேள்விகள் எழ துவங்கி உள்ளது.
 

Read more Photos on
click me!

Recommended Stories