Pandian Stores: சக்தி வேலுக்கு ஆப்பு வச்ச மீனா; சரவணனிடம் சிக்கிய தங்கமயில் - நடக்க போவது என்ன?

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 454ஆவது எபிசோடானது சக்திவேலின் கடையை மீனா  உடைக்கும் காட்சிகளுடன் தொடங்குகிறது.
 

Pandian Stores 2 serial April 15th Episode update mma

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 454 ஆவது எபிசோடானது அரசுக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி கட்டியிருக்கும் சக்திவேலின் கடையை உடைக்கும் காட்சிகளுடன் தொடங்குகிறது. மீனா கடையை உடைக்க வரும் போது சக்திவேல் கடையை உடைக்க கூடாது என்று மீனாவிடம் வாக்குவாதம் செய்கிறார். ஆனால் வேறு வழியே இல்லாமல் மீனா காவல் நிலையத்திற்கு போன் போட்டு அவர்களை வரவழைத்து அவர்களது உதவியுடன் கடையை உடைக்கிறார்.

Pandian Stores 2 serial April 15th Episode update mma
Sakthivel Fight

பாண்டியன் வீட்டில் வாக்குவாதம் செய்யும் சக்திவேல்:

சக்திவேல் உடனடியாக பாண்டியன் வீட்டிற்கு வந்து அங்கிருப்பவர்களுடன் வாக்குவாதம் செய்ய துவங்குகிறார். பாண்டியன் இல்லாத நிலையில் கோமதியும், செந்திலும் இருந்த நிலையில் அவர்களுடன் சண்டை போடுகிறார். பதிலுக்கு உன்னால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்து கொள் என்று செந்தில் துணிச்சலாக பதிலடி கொடுக்கிறார். மேலும் இனிமேலாவது, கடையை உங்களது சொந்த இடத்தில் கட்டுங்கள், அரசு இடத்தில் கட்டாதீங்க  என்று அறிவுரை வழங்குகிறார்.

Pandian Stores : சொதப்பிய மீனாவின் பிளான்? கோயிலில் நடந்தது என்ன - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்!


Thangamayil shocking Moment:

சரவணன் கண்ணில் சிக்கிய தங்கமயில்:

இதையடுத்து தங்கமயில் வேலை பார்க்கும் ஹோட்டலுக்கு சரவணனும், அவருடன் வேலை பார்க்கும் நண்பருடன் சாப்பிட வருகிறார். அப்போது தங்கமயில் அவர்களுக்கு சாப்பாடு பரிமாறும் போது சரவணனும், அவரது நண்பரும் இவரை பார்த்துவிடுகிறார்கள். அவர்களை பார்த்த பயத்தில் தங்கமயில் தண்ணீரை கீழே கொட்டிவிடுகிறார். 

Saravanan Slam Thangamayil:

தங்கமயிலை திட்டிய சரவணன் 

அதைப் பார்த்த மேனேஜர் அவரை திட்டவே, சரவணன் வெளியில் வந்து தங்கமயிலுடன் நீ கம்பெனி அங்கு என்று சொன்ன, உன்னை விடுவதற்கு, கூப்பிட வருவதற்கும் வந்து சென்றேன். ஆனால் இப்படி பொய் மேல பொய் சொல்லி இருக்க. என்று தங்கமயிலை திட்டி தீர்த்துள்ளார். அதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Pandian Stores Update: அரசியின் படிப்பிற்காக போராடும் மீனா; பரபரப்பாகும் திருமண வேலை?

Latest Videos

vuukle one pixel image
click me!