- Home
- Gallery
- Sun TV Serial: சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து விலகிய ஹீரோயின்! விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய நாயகி
Sun TV Serial: சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து விலகிய ஹீரோயின்! விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய நாயகி
சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், 'மலர்' சீரியலில் இருந்து ஹீரோயினாக நடித்து வரும் நடிகை ப்ரீத்தி ஷர்மா விலகி விட்டதாகவும் அவருக்கு பதில் விஜய் டிவி சீரியல் ஹீரோயின் கமிட் ஆகி உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சன் டிவி தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் 'மலர்'. இந்த சீரியலில் முதலில் ஹீரோவாக தொகுப்பாளராக இருந்து, செம்பருத்தி சீரியல் மூலம் ஹீரோவாக மாறிய அக்னி ஹீரோவாக நடித்த நிலையில், பின்னர் தன்னுடைய கை மற்றும் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சீரியலில் ஈடுகொடுத்து நடிக்க முடியாத காரணத்திற்காக மலர் சீரியலில் இருந்து விலகுவதாக கூறினார்.
அக்னி இந்த சீரியலில் இருந்து விலகிய பின்னர், திருமகள் சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்த சுரேந்திரன் கமிட் ஆகி தற்போது நடித்து வருகிறார். மேலும் இந்த தொடரில், கதாநாயகியாக சித்தி சீரியல் மூலம் அறிமுகமான ப்ரீத்தி ஷர்மா நடித்தார். இந்த சீரியல் முடிந்த பின்னர், மீண்டும் சன் டிவியில் துவங்கப்பட்ட 'மலர்' தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
தற்போது ஒரு சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து ப்ரீத்தி ஷர்மா விலக உள்ளதாகவும் அவருக்கு பதிலாக, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'மோதலும் காதலும்' சீரியலில் நடித்து வந்த கதாநாயகி அஸ்வதி அஷ் நடிக்க கமிட் ஆகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் ப்ரீத்தி ஷர்மா விலக என்ன காரணம் என்பது குறித்த உறுதியான தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.
'மலர்' சீரியலை இயக்குனர் ஜவஹர் இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், அகிலா பிரகாஷ், நிஹாரிகா ஹர்ஷு, ரவிகாந்த், தேவ் ஆனந்த், பார்வதி, உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அக்கா மீது உயிரையே வைத்திருக்கும் தங்கையின் பாசத்தை பற்றியும், தன்னுடை அக்கா கணவர் வீண் கொலை பழியை சுமந்து ஜெயிலில் இருக்கும் நிலையில் அவரை காப்பாற்ற மலர் போராடி வரும் கதைக்களம் தான் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.