விஜய் டிவியில் பல சீசன்களாக மாகாபா-வுடன் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே.
Image credits: our own
Tamil
விஜய் டிவி போட்டியாளர்:
கடந்த 8 ஆண்டிகளுக்கு மேலாக தன்னுடைய தொகுப்பாளினி பணியை சிறப்பாக செய்து வரும் பிரியங்கா, விஜய் டிவியில் போட்டியாளராகவும் திறமையை வெளிப்படுத்தியவர்.
Image credits: our own
Tamil
பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி:
பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதல் ரன்னரப்பாகவும், குக் வித் கோமாளியின் டைட்டிலையும் வென்றார்.
Image credits: our own
Tamil
இரண்டாவது திருமணம்:
தன்னுடைய முதல் திருமண வாழ்க்கை விவகாரத்தில் முடிந்த நிலையில், கடந்த வாரம் வஷிஷ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
Image credits: Instagram
Tamil
வென்ட் மேனேஜ்மேண்ட் நிறுவனம்:
இலங்கை தமிழரான இவர் ஈவென்ட் மேனேஜ்மேண்ட் நிறுவனம் ஒன்றை வைத்துள்ளார். கடந்த சில வருடங்களாக நட்பாக பழகிய இவர்கள் தற்போது திருமண வாழ்க்கையில் இணைத்துள்ளார்.
Image credits: Instagram
Tamil
புதிய புரோமோ:
பிரியங்கா புதிய திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளதால், இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கவில்லை என்பது புதிய புரோமோ மூலம் தெரிகிறது.
Image credits: Instagram
Tamil
லட்சுமி பிரியா:
அவருக்கு பதிலாக, மகாநதி சீரியலில் காவேரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் லட்சுமி பிரியா தான் மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கியுள்ளார்.
Image credits: our own
Tamil
நெட்டிசன்கள் கேள்வி:
அதே நேரம் பிரியங்கா முழுமையாக விஜய் டிவியை விட்டு விலகி விட்டாரா? என்கிற சந்தேக கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.