ஒரு மாடலாக தன்னுடைய கேரியரை துவங்கி பின்னர் விஜய் டிவி தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் சமையல் திறமை மூலம் ஃபைனல் வரை வந்தபோதும் இவரால் வெற்றிபெற முடியாமல் போனது.
மணிரத்னத்தின் ஓகே கண்மணி படத்தில் குட்டி ரோலில் நடித்த பவித்ரா, பின்னர் நாய் சேகர் , உல்லாசம் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் .
சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் பவித்ரா, கடந்த ஓரிரு வாரத்திற்கு முன் வெளியிட்ட புகைப்படம் சர்ச்சைகளுக்கு ஆளானது.
பவித்ரா உடல் மெலிந்து, இவரின் முகமே அடையாளம் தெரியாதது போல் இருந்தது.
இதை தொடர்ந்து, இதற்க்கு விளக்கம் கொடுக்கும் விதமாக... தான் எந்த ஒரு பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்யவில்லை என விளக்கம் கொடுத்தார்.
மேலும் அதிகப்படியான பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையால், பவித்ரா மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் ஒரு தகவல் பரவியது.
இந்த வதந்திக்கு பதிலளித்துள்ள பவித்ரா, இந்த தகவல்கள் முற்றிலும் தவறானது, நான் தீவிர உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளேன் .
அதற்கான சிகிச்சையில் இருக்கிறேன் என கூறியுள்ளார். கூடிய விரைவில் மிகவும் வலிமையான பெண்ணாக அதில் இருந்து மீண்டு வருவேன் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.