சன் டிவிக்கு டஃப் கொடுக்கும் விதமாக விஜய் டிவியிலும் வித்தியாசமான கதையம்சத்தோடு ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த சீரியல்களுக்கும் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், 2025-ம் ஆண்டின் 19வது வாரத்திற்கான தமிழ் சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வெளியாகி உள்ளது. இதில் விஜய் டிவின் டாப் 5 சீரியல்கள் என்னென்ன என்பதையும் அதன் டிஆர்பி விவரங்களையும் இங்கே காணலாம்.
24
அய்யனார் துணை சீரியலுக்கு அடித்த ஜாக்பாட்
விஜய் டிவியில் பிரைம் டைம் சீரியல்களுக்கு தான் அதிக டிஆர்பி ரேட்டிங் கிடைக்கும். அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் 7.02 டிஆர்பி புள்ளிகளை பெற்று முதலிடத்தை தக்கவைத்து உள்ளது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை அய்யனார் துணை சீரியல் பிடித்துள்ளது. அந்த சீரியலுக்கு 6.76 டி.ஆர்.பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இந்த சீரியல் தற்போது நேரம் மாற்றப்பட்டதற்கு பின்னர் டிஆர்பி ரேஸில் பட்டைய கிளப்பி வருகிறது.
34
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 டிஆர்பி என்ன?
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இந்தவாரம் 6.36 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 6.67 டிஆர்பி புள்ளிகளை பெற்றிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் சற்று சரிவை சந்தித்திருந்தாலும் 9வது இடத்தை தக்க வைத்து உள்ளது. அடுத்ததாக நான்காவது இடத்தை மகாநதி சீரியல் பிடித்துள்ளது. இந்த சீரியல் கடந்த வாரம் 5.26 டிஆர்பி புள்ளிகள் பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் 5.31 புள்ளிகளை பெற்று முன்னேற்றம் கண்டுள்ளது.
விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலாக இருந்த பாக்கியலட்சுமி அண்மையில் இரவு 7 மணிக்கு மாற்றப்பட்டது. இந்த நேர மாற்றத்துக்கு பின்னர் அதன் டிஆர்பி ரேட்டிங் மளமளவென சரிந்துவிட்டது. கடந்த வாரம் 5ம் இடத்தில் இருந்த பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 6ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. 4.72 டிஆர்பி புள்ளிகளை பெற்ற சின்ன மருமகள் சீரியல், பாக்கியலட்சுமி சீரியலை பின்னுக்கு தள்ளி டிஆர்பி ரேஸில் ஐந்தாம் இடத்தை பிடித்து உள்ளது.