ஆறுமுக குமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள ஏஸ் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Ace Movie Review: Vijay Sethupathi’s 51st Film Releases Today – First Impressions! மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 51வது திரைப்படம் ஏஸ். இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை 7சிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விமர்சனத்தை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

ஏஸ் திரைப்படத்தின் விமர்சனம்

ஏஸ் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கெட் அப், மலேசியா பின்னணி, விஜய் சேதுபதி - யோகிபாபு காமெடி ஆகியவை அருமையாக உள்ளது. கதாநாயகி ருக்மிணி ஓகே தான். உருகுது பாடல் சூப்பர். ஐடியாவாக படம் நன்றாக உள்ளது. ஆனால் அதை எடுத்துள்ள விதம் சரியில்லை. அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் கனெக்ட் ஆகவில்லை. திரைக்கதை விறுவிறுப்பாக இல்லை. மொத்தத்தில் ஏஸ் ஒரு ஆவரேஜ் படம் தான் என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

ஏஸ் ஒரு வேடிக்கையான, அதிரடியான, காமெடி நிறைந்த படம், இதில் எந்த பாசாங்கும் இல்லை, ஏனெனில் இது சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை முழுவதும் ஒரு சிறந்த கெமிஸ்ட்ரியுடன் ஓடுகிறது. விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு ஒன் லைனர்களும் நகைச்சுவையும் அருமை! ஆபாசமோ வன்முறையோ இல்லை, டைம் பாஸ் பொழுதுபோக்கைத் தேடும் பேமிலி ஆடியன்ஸுக்கு இது சரியானது. இயக்குனர் ஆறுமுக குமார் படத்தை ஒரு நேர்த்தியான முறையில் கொடுத்துள்ளார், எந்த மந்தமான தருணங்களும் இல்லை. ருக்மினி வசந்த் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

ஏஸ் படத்தின் எக்ஸ் தள விமர்சனம்

ஏஸ் திரைப்படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக உள்ளது. இரண்டாம் பாதியிலும் அதே விறுவிறுப்புடன் நகர்கிறது. கதை யூகிக்கக்கூடியதாக இருந்தாலும் தரமான திரைக்கதையால், நம்மை கட்டிப்போட்டிருக்கிறார்கள். யோகிபாபு தெறிக்கவிட்டுள்ளார். போல்டு கண்ணன் கேரக்டர் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி இதுபோன்ற ரோல்களில் நடிக்க வேண்டும். ருக்மினி வசந்த் க்யூட்டாக இருக்கிறார். மலேசியாவின் அழகை கண்ணுக்கு குளிர்ச்சியாக கொடுத்துள்ளனர். சாம் சி.எஸ் பின்னணி இசை ஒவ்வொரு காட்சியையும் தூக்கி நிறுத்துகிறது. காமெடி மனதில் நிற்கும்படி உள்ளது என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

ஏஸ் படத்தின் முதல் பாதி காமெடி நிறைந்ததாக உள்ளது. திரில்லிங் ஹெய்ஸ்ட் காட்சிகள் இரண்டாம் பாதியில் அருமையாக உள்ளது. விஜய் சேதுபதி, ருக்மினி வசந்த் மற்றும் யோகிபாபு உடன் மிரட்டி இருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…