Rashmika and Vijay Devarakonda
கடந்த சில வருடங்களாகவே விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா காதல் குறித்த தகவல் டோலிவுட் வட்டாரத்தில் அதிகம் பேசுபொருளாகி உள்ளது. இதுவரை இருவருமே காதல் குறித்து வாய் திறக்கவில்லை என்றாலும், பல சமயங்களில் ஒன்றாக வெளியே செல்லும் போது கேமரா கண்களில் சிக்கி கிசுகிசுவுக்கு ஆளாகி வருகிறார்கள்.
Vijay Devarakonda And Rashmika love
அதே போல் சென்னையில் நடந்த, புஷ்பா 2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும்... நீங்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளவர் ஒரு நடிகரா? என தொகுப்பாளர் கேட்டதற்கு இது எல்லாருக்குமே தெரிந்தது தான் என கூறி, விஜய் தேவரகொண்டா உடனான காதலை மறைமுகமாக வெளிப்படுத்தினார். விஜய் தேவரகொண்டாவும், நடிகை ஒருவருடன் டேட்டிங் செய்து வருவதை செய்தியாளர்கள் முன் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Vijay Devarakonda And Rashmika Wedding?
ராஷ்மிகா அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து வந்தாலும், விஜய் தேவரகொண்டாவுக்கு சமீபத்தில் பெரிய வெற்றி படங்கள் என எதுவும் இல்லை. தொடர் தோல்விகளால் அவரது இமேஜ் பாதிக்கப்பட்டுள்ளது.