நயன் பேசியும் வேலைக்கு ஆகல! கறார் காட்டிய அஜித்.. AK 62 படத்தில் இருந்து விலகியதை உறுதி செய்த விக்னேஷ் சிவன்!

Published : Feb 04, 2023, 11:21 AM ISTUpdated : Feb 04, 2023, 11:22 AM IST

அஜித்தின் 62 ஆவது படத்தை, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... அந்த படத்தில் இருந்து அதிரடியாக விலகுவதை ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.

PREV
17
நயன் பேசியும் வேலைக்கு ஆகல! கறார் காட்டிய அஜித்.. AK 62 படத்தில் இருந்து விலகியதை உறுதி செய்த விக்னேஷ் சிவன்!

அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'துணிவு'. இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடித்திருந்த இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலக அளவில் இதுவரை 300 கோடி வசூல்செய்து  சாதனை நிகழ்த்திய நிலையில், அஜித் தன்னுடைய 62 வது படத்தில் அடுத்ததாக கவனம் செலுத்த உள்ளார்.

27

இந்த படத்தை நடிகை நயன்தாராவின் காதல் கணவரும், பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில்.. இந்த படத்தில் இருந்து அதிரடியாக விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக சமீபத்தில் சில தகவல்கள் வெளியானது.

'பாரதி கண்ணம்மா 2' சீரியலில் ஹீரோ... ஹீரோயின் இவர்கள் தானா? வெளியான ப்ரோமோ கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

37

விக்னேஷ் சிவன் கூறிய கதை, அஜித் மற்றும் இப்படத்தை தயாரிக்க உள்ள லைகா நிறுவனத்திற்கு திருப்திகரமாக இல்லாத காரணத்தால், இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், விக்னேஷ் சிவனுக்கு பதிலாக அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

47

தற்போது அஜித், குடும்பத்துடன் லண்டனில் வெகேஷனை என்ஜோய் செய்து வரும் நிலையில், லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ் கரனுடன் விக்னேஷ் சிவனின் கதை குறித்து, பேசிய பின்னரே இப்படி பட்ட முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

சொந்த கிராமத்தில் பங்களா கட்டும் சீரியல் நடிகை நீலிமா! விறுவிறுப்பாக துவங்கிய பணிகள் அவரே வெளியிட்ட போட்டோஸ்!

57

தன்னுடைய கணவருக்காக வரிந்து கட்டிக்கொண்டு, மனைவி நயன்தாராவும் ஏகே 62 பட குறுவினரிடம் சமரசம் பேச முயற்சி செய்த போதும் அந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்துள்ளது. அதேபோல் தன்னுடைய கணவருக்கு அஜித்திடம் கதை சொல்லும் படி சிபாரிசு செய்ததே நயன்தாரா தான் என்றும், இந்த படம் கைகூடாமல் போனதால் நயனும் கடும் அப்செட்டில் உள்ளதாக தகவல் வெளியாகின.

67

எனினும் இது குறித்து லைக்கா தரப்பில் இருந்தும், விக்னேஷ் சிவன் தரப்பில்  இருந்தும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாக வெளியாகாத நிலையில், இப்படி வெளியாகும் தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் இருந்தது. ஆனால் இந்த சர்ச்சைக்கு தற்போது விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பிரபல நடிகையின் மகளை இரண்டாவது திருமணம் செய்த அதிதி ராவின் முன்னாள் கணவர்!வைரலாகும் போட்டோஸ்!

77

ட்விட்டர் பக்கத்தில், அடுத்ததாக AK 62 படத்தை இயக்குவதாக குறிப்பிட்டிருந்த விக்கி, தற்போது... தன்னுடைய 6 ஆவது படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த தகவல் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories