நடிகர் கமலஹாசன் நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, தேவர்மகன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நீலிமா இசை. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த, இவருக்கு சில சீரியல் வாய்ப்புகளும் கதவை தட்ட துவங்கியது.
தொடர்ந்து வெள்ளித்திரை வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், துவண்டு விடாத நீலிமா... சின்ன திரையில் ஹீரோயின் ஆகவும், வில்லி கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தினார்.
நீலிமா இசைக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு இரண்டாவது குழந்தை பிறந்தது. தற்போது குழந்தைக்காக நேர செலவிட்டு வரும் நீலிமா எந்த சீரியல்களிலும் நடிக்காத நிலையில், அவ்வப்போது... சமூக வலைதளத்தில் மட்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதே போல் குடும்பத்துடன் எங்கு சென்றாலும் அங்கு எடுக்கப்படும் குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.
பொதுவாக சிட்டிகளில் வந்து செட்டிலான பின்னர், சாதாரண மனிதர்கள் கூட, கிராமத்து வாழ்க்கையை மறந்து விடும் நிலையில், தன்னுடைய சொந்த கிராமத்தில் வீடு கட்டி வாழ வேண்டும் என நினைக்கும் நீலிமா இசை மற்றும் அவருடைய கணவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.