கைதி படத்தின் ரிலீசுக்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை தன்னால் முடிந்த வரை லோகேஷ் கனகராஜ் நிறைவு செய்து வரும் நிலையில், விக்ரம் படம் இதுவரை அவர் இயக்கிய அனைத்து படங்களையும் விஞ்சும் வகையில் அமைந்தது.
'விக்ரம்' படத்தின் வெற்றிக்கு பின்னர், தளபதி விஜய்யை வைத்து இயக்குவதை உறுதி செய்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், அதிகார பூர்வமாக 'லியோ' படத்தை தயாரிக்கும் 7 ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதில், இப்படத்தில் பணியாற்ற உள்ள... தொழில்நுட்ப கலைஞர்கள், இசையமைப்பாளர், இயக்குனர் உள்ளிட்டவர்கள் பெயர் இடம்பெற்ற நிலையில் விரைவில் நடிகர் - நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்படி ஒரு டைட்டில் எதிர்பார்க்கவே இல்லையே 'லியோ '... மிரட்டல் டீஸருடன் வெளியானது தலைப்பு!
இதை தொடர்ந்து, வெளியான தகவலில்... இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக அதிகார பூர்வ தகவல் வெளியானது. மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், கெளதம் மேனன், ஆக்சன் கிங் அர்ஜுன், மன்சூர் அலிகான், உள்ளிட்ட பலர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இன்றைய தினம் விக்ரம் படத்தில் ஆக்ஷனில் கலக்கிய 'ஏஜென்ட் டீனா' கதாபாத்திரத்தில் நடித்த வசந்தியும் கமிட் ஆகியுள்ளார் என்கிற தகவல் வெளியானது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் இப்படத்தின், டைட்டில் இன்று மாலை ப்ரோமோவுடன் வெளியானது. யாரும் எதிர்பார்க்காத விதமாக இப்படத்திற்கு லியோ என பெயர் வைத்துள்ளனர் படக்குழுவினர். அதே போல் தளபதி ஒரு பக்கம் சாக்கலேட் செய்வது, மறுபுறம் கூர்மையான வால் செய்வது என ப்ரோமோவிலேயே மிரட்டியுள்ளார்.
இதையும் பக்கா ஸ்கெச் போட்டு தான் அறிவித்துள்ளது படக்குழு, அதாவது... அக்டோபர் 19 ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை நாட்கள் வருகிறது. சரஸ்வதி பூஜை, விஜயதசமி போன்ற நாட்களும் வருவதால், பக்காவாக ஸ்கெட்ச் போட்டு இந்த நாளை 'லியோ' தட்டி தூக்கி உள்ளார்.