Published : Aug 14, 2022, 07:16 PM ISTUpdated : Aug 14, 2022, 07:18 PM IST
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனியா நகரில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் குதூகலமாக சுற்றி பார்த்து வருகின்றனர். இந்த புகைப்படங்களையும் விக்கி பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாரா கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. டாப் டென் நாயகிகளில் முன்னணியில் உள்ளார் நயன்தாரா. தமிழில் மட்டுமல்ல பல மொழிகளிலும் டாட் டென் ஒருவராக வலம் வருகிறார். தற்போது நயன்தாரா ஷாருக்கானின் ஜவான், ஜெயம் ரவியுடன் புதிய படம் உள்ளிட்டவற்றில் பிசியாக உள்ளார்.
25
nayanthara - vignesh shivan
கடந்த 7 ஆண்டு காதல் பந்தத்தை ஜூன் 9 -ம் தேதி மணப்பந்தலில் முடிவுக்கு கொண்டு வந்த நட்சத்திர தம்பதிகளை பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வந்தனர். இதை தொடர்ந்து தாய்லாந்திற்கு ஹனிமூனுக்காக சென்ற இவர்களது புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின. அங்கு இருவரும் மாறி மாறி எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இது குறித்தான டாக்டர் ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வந்தது தங்களது திருமண புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
இதற்கிடையே இன்ஸ்டாவில் திருமண புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் விக்கி. இந்த போட்டோக்களில் நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் முதல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் வரை அனைவரும் இருந்தனர். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.
அதோடு இவர்களின் திருமண வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற 44 வது ஒலிம்பியாட் சதுரங்க போட்டி விழா துவக்க விழாவை இயக்கும் பணியில் பிசியாக இருந்தார் விக்கி, இந்த விழா சமீபத்தில் நிறைவடைந்ததை அடுத்து தற்போது மீண்டும் இரண்டாவது ஹனிமூன்காக ஸ்பெயின் சென்றுள்ளனர் விக்கி- நயன்.
55
nayanthara - vignesh shivan
விமான புகைப்படங்களை வெளியிட்டு அதிக வேலைகளுக்கு பிறகு தற்போது நமக்காக சிறிது நேரம் என குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனியா நகரில் இருவரும் குதூகலமாக சுற்றி பார்த்து வருகின்றனர். இந்த புகைப்படங்களையும் விக்கி பகிர்ந்து வருகிறார்.