விருமன் வெற்றியில் ஒரு பங்கை நடிகர் சங்கத்திற்கு கொடுத்த சூர்யா! எவ்வளவு தெரியுமா?

Published : Aug 14, 2022, 05:00 PM ISTUpdated : Aug 14, 2022, 05:21 PM IST

விருமன் வெற்றிகளை கொண்டாடி வருவதால். படத்தின் லாபத்தில் இருந்து நடிகர் சங்கத்திற்கு ரூபாய் 25 லட்சத்தை சூர்யா தனது கைகளால் வழங்கியுள்ளார். அப்போது இவருடன் கார்த்தி உள்ளிட்ட பட குழுவினர் வந்துள்ளனர்.

PREV
15
விருமன் வெற்றியில் ஒரு பங்கை  நடிகர் சங்கத்திற்கு கொடுத்த சூர்யா! எவ்வளவு தெரியுமா?
viruman

கொம்பன் படத்தை தொடர்ந்து கார்த்தி மீண்டும் முத்தையா உடன் இணைந்து நடித்துள்ள படம் விருமன். இந்த படத்தில் பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை சூர்யாவை 2டி தயாரித்து உள்ளது.

25

இந்த படத்தில் ராஜ்கிரன் சூரிய பிரகாஷ்ராஜ் மற்றும் பிற துணை நடிகர்கள் தோன்றியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளுக்கு வந்த இந்த படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விருமன் படத்தை விநியோகிக்கும் உரிமையை  சக்தி பிலிம்ஸ் பெற்றிருந்தது.

"கதாநாயகிகள் போஸ்டரில் இடம் பெறுவதே பெரிய விஷயம்"..ஆதங்கத்தை கொட்டிய தமன்னா

35

விருமன் படம் இதுவரை பாக்ஸ் ஆபீஸில் 8.2 கோடிகளை வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக வெளியான கஞ்சா பூ கண்ணாலே, மதுரவீரன், வானம் கிடுகிடுங்க உள்ளிட்ட பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. இதில் மதுரவீரன் பாடலை அதிதி சங்கர் பாடியிருந்தார். இந்த பாடல் குறித்த சர்ச்சையும் கிளம்பி  இருந்தது.

மேலும் செய்திகளுக்கு...தந்தையின் முத்தத்திற்கு அர்த்தம் சொன்ன கவிஞன்...நா. முத்துக்குமாரின் நினைவு நாள் இன்று

45
viruman team

முன்னதாக இந்த பாடலுக்கு பிரபல பாடகி ராஜலட்சுமி குரல் கொடுத்தார். ஆனால் திடீரென நடிகை அதிதி சங்கரை இவருக்கு பதிலாக பாட வைத்துள்ளனர். இதனால ராஜலட்சுமியின்  ரசிகர்கள் நடிகை அதிதி ஷங்கரை வெகுவாக விமர்சித்து வந்தனர். பின்னர் ராஜலட்சுமி கேட்டுக் கொண்டதை எடுத்து அந்த விமர்சனங்கள் அடங்கி போயின.

மேலும் செய்திகளுக்கு...இளம் பெண்ணுடன் காருக்குள் கசமுசா... போலீசிடம் வசமாக சிக்கிய சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யா

இந்நிலைகள் வெற்றிகளை கொண்டாடி வருவதால் படத்தின் லாபத்தில் இருந்து நடிகர் சங்கத்திற்கு ரூபாய் 25 லட்சத்தை சூர்யா தனது கைகளால் வழங்கியுள்ளார். அப்போது இவருடன் கார்த்தி உள்ளிட்ட பட குழுவினர் வந்துள்ளனர்.

55
viruman team

நடிகர் சங்கத்தின் அலுவலகத்திற்கு வந்த படக்குழு தலைவரான நாசரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். பின்னர் சூர்யா தொகைக்கான காசோலையை வழங்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories