இந்த படத்தின் டிரைலர் கூட பிரம்மாண்டமாகத்தான் வெளியாகியிருந்தது முன்னணி நாயகிகளை கொண்டு டிரைலரை வெளியிட்டு இருந்தார் சரவணன் அருள். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பான் இந்தியா மூவியாக உருவாகி இருந்தது இந்த படம்.
முதல் படம் தோல்வியை சந்தித்த போதிலும் அசராத சரவணன் அருள் தற்போது இரண்டாவது படத்திற்கு தயாராகி விட்டாராம். இதற்காக பிரபல இயக்குனர்கள் பலரையும் அழைத்து கதை கேட்டு வருகிறாராம் நாயகன். முன்னதாக இவர் நடித்த சரவணா ஸ்டோர் விளம்பரங்கள் பல விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தன. இருந்தும் இதற்கெல்லாம் அஞ்சாமல் தான் இவர் நாயகனாக உருவெடுத்தார். இந்நிலைகள் மீண்டும் ஒரு படம் இவர் நடிக்க இருப்பது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.