கங்குவாவை விட கம்மி வசூல்; பாக்ஸ் ஆபிஸில் காத்துவாங்கும் விடாமுயற்சி!

Published : Feb 13, 2025, 07:51 AM IST

விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆகும் நிலையில், 7 நாட்களில் அப்படம் வசூலித்துள்ள தொகை எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

PREV
14
கங்குவாவை விட கம்மி வசூல்; பாக்ஸ் ஆபிஸில் காத்துவாங்கும் விடாமுயற்சி!
விடாமுயற்சி அஜித்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் தான் விடாமுயற்சி. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சவுத் குயின் திரிஷா நடித்திருக்கிறார். மேலும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிக் பாஸ் பிரபலம் ஆரவ், நடிகை ரெஜினா கசெண்ட்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அதேபோல் ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொண்டு இருந்தார்.

24
அஜித்துக்கு ஜோடியாக திரிஷா

விடாமுயற்சி திரைப்படம் கடந்த மாதமே ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் படத்தின் ரிலீசுக்கு சிக்கல் ஏற்பட்டதால் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தனர். அதன்படி பிப்ரவரி 6ந் தேதி விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை அப்படம் பூர்த்தி செய்யவில்லை. ஏனெனில் இது வழக்கமான ஆக்‌ஷன் காட்சிகள் நிரம்பிய அஜித் படம் போல் இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. அது சிலருக்கு ஒர்க் அவுட் ஆனாலும் பெரும்பாலானோருக்கு படம் திருப்திகரமாக இல்லை.

இதையும் படியுங்கள்... த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி! என்ன நடந்தது?

34
விடாமுயற்சி வசூல்

வசூலிலும் விடாமுயற்சி படம் நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது. ரிலீஸ் ஆன முதல் நாளில் ரூ.24 கோடி வசூலித்த இப்படம் பின்னர் போகப்போக 15 கோடியை தாண்டுவதே எட்டாக்கனியாக இருந்தது. அதன்படி தற்போது படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆகும் நிலையில், பாக்ஸ் ஆபிஸில் ரூ.117.5 கோடி வசூலித்து உள்ளதாம். இதில் இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.82.1 கோடி வசூலித்து இருக்கிறது. வெளிநாடுகளில் 35.4 கோடி வசூலித்துள்ளது.

44
விடாமுயற்சி பாக்ஸ் ஆபிஸ்

இதில் 7ம் நாளில் மட்டும் இப்படம் ரூ.1.96 கோடி வசூலித்துள்ளது. ஒரே நாளில் இப்படம் வசூலித்த கம்மியான வசூல் இதுவாகும். இது சூர்யாவின் அட்டர் பிளாப் படமான கங்குவா விட மிகவும் கம்மியாகும். கங்குவா திரைப்படம் 7ம் நாளில் ரூ.2.4 கோடி வசூலித்து இருந்தது. ஆனால் விடாமுயற்சி படம் அதைவிட 50 லட்சம் கம்மியாக வசூலித்து இருக்கிறது. நாளை புதுப்படங்கள் வரிசைகட்டி ரிலீஸ் ஆவதால் விடாமுயற்சி வசூலுக்கு மேலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்... அஜித்தின் ஏகே 64 டைரக்டர் இவர் தானா? அறிவிப்பிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்

click me!

Recommended Stories