தங்கை பவதாரிணி இறந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் இன்று அவரது பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்த இயக்குநர் வெங்கட் பிரபு, தங்கைக்கு உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் குடும்பமே ஒரு இசை குடும்பம் தான் என்று சொல்ல வேண்டும். இளையராஜாவிற்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என்று 2 மகன்கள் உள்ளனர். பவதாரிணி என்ற மகள் இருந்தார். அவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி புற்று நோய் காரணமாக உயிரிழந்தார்.
26
இளையராஜாவின் மகள் பவதாரணி:
இளையராஜாவின் மூன்று பிள்ளைகளுமே அப்பாவை போல், இசையில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், கார்த்திக் ராஜா சில படங்களுக்கு இசையமைத்துள்ள நிலையில், அந்த படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாத நிலையில், தன்னுடைய தந்தையுடனே பணியாற்றி வருகிறார். இதே போன்று யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் இருக்கிறார். இளையராஜாவின் மகள் பவதாரணியும் இசையமைப்பாளர் மற்றும் பாடகியாக இருந்தார். தன்னுடைய அப்பா இசையில் ஏராளமான பாடல்களை பவதாரிணி பாடியுள்ள நிலையில், 'பாரதி' படத்தில் இவர் பாடிய மயில்போல பொண்ணு ஒன்னு பாடலுக்கு தேசிய விருதையும் வென்றார்.
இதே போல் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனும் அவரது மகன்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோர் இசையில் ஒருபக்கம் ஆர்வம் இருந்தாலும், இயக்குநராகவும், பின்னணி பாடகர், நடிகர் என வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கிறார்கள்.
46
பவதாரிணி மறைவு:
இந்நிலையில் இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவு இளையராஜாவின் குடும்பத்தையே உச்ச கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் பவதாரிணியின் அவரின் உடலை, இளையராஜாவின் சொந்த ஊரான தேனி அருகே உள்ள பண்ணையபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது அம்மாவின் சமாதி அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. மகள் இறப்புக்கு பின்னர் அடிக்கடி இளையராஜா அவரின் சமாதிக்கு சென்று வருவதோடு, ஆன்மீகத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
பவதாரிணியின் நினைவு நாளன்று இளையராஜா உருக்கமாக பேசி வீடியோ:
வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் அடிக்கடி பாவதாரிணியின் நினைவுகளை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ஏற்கனவே பவதாரிணியின் நினைவு நாளன்று இளையராஜா உருக்கமாக பேசி வீடியோ வைரலானது. அதில், பவதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 12 அன்று அவரின் திதியும் வர உள்ளது. இதை இரண்டையும் ஒரு நினைவு நாள் நிகழ்வாக நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். இதில் இசை கலைஞர்களும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தனர்.
66
பவதாரிணி பிறந்தநாளுக்கு வெங்கட் பிரபு வாழ்த்து:
அதன்படி இன்று பவதாரிணியின் பிறந்தநாளுடன் அவரது திதியும் வந்துள்ளதால், அவருக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு நிகழ்வாக இதை அனுசரிக்க இளையராஜா குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, பவதாரிணி மீது அதீத பாசம் வைத்திருந்த வெங்கட் பிரபு தங்கையுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, "பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் தங்கச்சி பவதாரிணி. நீங்கள் சிறந்த மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறாய் என்பது எங்களுக்குத் தெரியும். உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.