
திரையுலகில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்தாலும், இளையராஜாவின் இசை எப்போதுமே தனித்துவமானதாகவே ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. இசையை தன் மூச்சாக சுவாசித்து கொண்டிருக்கும் இளையராஜா, இசை மீது கொண்ட ஆர்வம் காரணமாக தன்னுடைய குடும்பத்தை கூட சரியாக கவனிக்க தவறிவிட்டேன் என, அண்மையில் கூறிய தகவலை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்திருக்க முடியாது. அதே போல், மறைந்த தன்னுடைய மகளின் பாசம் இப்போது தான் புரிகிறது என மனம் நொந்து பேசி இருந்தார்.
இளையராஜா இசை சாதனைகள் ஏராளமாக இருந்தாலும், அவரை பற்றிய சில விமர்சனங்களுக்கும் திரையுலகில் பஞ்சம் இல்லை. இளையராஜா தன்னுடைய பாடலை அடுத்தவர்கள் பயன்படுத்த காப்பி ரைட்ஸ் கோருவது, அவருக்கு இருக்கும் பணத்தாசை காரணமாக என தயாரிப்பாளர் கே.ராஜன், பாடலாரிசியார் வைரமுத்து ஆகியோர் நேரடியாகவே விமர்சனம் செய்துள்ளனர்.
ஷங்கரின் அடுத்த பட ஹீரோ இந்த நடிகரின் மகனா? அப்போ கார்த்திருக்கும் செம்ம சம்பவம்!
அதே போல் இளையராஜா எனக்கு திமிர் இருக்கிறது, கர்வம் இருக்கிறது, என தன்னை தானே பெருமையாக பேசி கொள்வதும் சில விவாதங்களுக்கு ஆளானது. இதுகுறித்து பற்றி பிரபல பாடகர் வீரமணி கண்ணன் தன்னுடைய கருத்தை, சினி உலகம் ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியில் பேசியுள்ளார்.
இளையராஜா பற்றி அவர் பேசும்போது... "இளையராஜா பற்றி பலர் பல்வேறு விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். ஆனால் அவருடைய இசை திறமை மிகவும் தனித்துவமானது. 'எஜமான்' திரைப்படத்தில், இளையராஜா பைரவி ராகத்தில் ஒரு பாடலை அமைத்திருப்பார். அதில் பல மெட்டுக்கள் போட்டிருப்பார். பொதுவாக மெலடி பாடல்களை இசையமைக்கும் போது, இசையமைப்பாளர்கள் மெலடியில் ஸ்ட்ராங்காக இருந்தாலும்... ரிதத்தை பெரிதாக கவனிக்க மாட்டார்கள். காரணம் கம்போசிங்கின் போது, அது இசையமைப்பாளர்களின் கவனத்தை சிதறடிக்க செய்யும்.
காதல் சுகுமார் சொன்ன வார்த்தை; சிம்புவுக்கு இந்த ஹிட் பாட்டை எழுதிய டி.ராஜேந்தர்!
ஆனால் இளையராஜாவை பொருத்தவரை எதனையும் முழுமையாக செய்யக்கூடியவர். அதனால் தான் மற்ற இசையமைப்பாளர்களை மியூசிக் ப்ரொடியூசர் என்றும் இளையராஜாவை மட்டும் மியூசிக் கம்போசர் என்றும் அழைக்கிறோம் என்று தன்னுடைய கருத்தை மிகவும் தெளிவாகவும், அழகாகவும் விளக்கியுள்ளார்.
அதற்காக மற்ற இசையமைப்பாளர்களின் திறமையை நான் என்றுமே குறைத்து மதிப்பிட்டது இல்லை. ஆனால் இளையராஜாவோடு, மற்றவர்கள் யாரையும் ஒப்பிட வேண்டாம் என்பதே என்னுடைய கருத்து என கூறியுள்ளார். மேலும் இது பற்றி பல தன்னிடம் விவாதம் செய்துள்ள போதிலும் அவர்களுக்கு என்னுடைய முகநூல் பக்கத்தில் நான் என்னுடைய விளக்கத்தை கொடுத்து வருகிறேன்.
தொடர்ந்து இளையராஜா பற்றி பேசிய அவர், அவருக்கு மண்டை கர்வம் அதிகம் என பல விமர்சிப்பது உண்டு. அவ்வளவு ஏன் எனக்கே எஸ்பிபி உடன் அவருக்கு ஏற்பட்ட முரண்பாடு கேள்விப்பட்டபோது, ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என தோன்றியது. ஆனால் அதெல்லாம் தனி. இளையராஜாவின் பர்சனல் என்பது வேறு. அவருடைய இசை திறமை என்பது தனி. எனவே அவருடைய மற்ற சில பிரச்சனைகளை அவருடைய இசையோடு ஒப்பிட்டு பேசாதீர்கள் என பேசி உள்ளார்.
ட்ரோன் மூலம் குழந்தையை காப்பாற்றிய ஷண்முகத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி? 'அண்ணா' சீரியல் அப்டேட்!