
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ், கடைசியாக 'ராயன்' படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேப்பை பெற்றது. தற்போது குபேரா, இட்லி கடை, டி55 (தனுஷின் 55ஆவது படம்) ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் தனுஷை மிஞ்ச முடியாது. கதைக்கும், கதாநாயகனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டால் மட்டுமே அந்த படங்களில் அவர் நடிப்பார்.
ஒரு நடிகர் என்பதை தாண்டி, தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என்று பன்முக கலைஞராக திகழ்கிறார். பா பாண்டி, ராயன், ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் இப்போது இட்லி கடை மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில், 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படம் வரும் 21 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இதை தொடர்ந்து தனுஷ் தன்னுடைய 55ஆவது படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உடன் இணைந்துள்ளார். அமரன் கொடுத்த சூப்பர் ஹிட் ரெஸ்பான்ஸ்க்கு பிறகு தனுஷ் தானாக அவரை அழைத்து இந்த வாய்ப்பை கொடுத்துள்ளார். இந்தப் படம் உண்மை கதையை கொண்ட படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கோபுரம் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அன்புசெழியன் மற்றும் சுஷ்மிதா அன்புசெழியன் இருவரும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.
மறைந்த தங்கை பவதாரிணிக்கு உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன வெங்கட் பிரபு!
இந்தப் படத்திற்கு பிறகு தனுஷ் நடிக்கும் படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஏற்கனவே குபேரா, இட்லி கடை, ராஜ்குமார் பெரியசாமி படங்கள் கைவசம் இருக்கும் நிலையில் அடுத்ததாக இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படமான மேஸ்ட்ரோ, ஆனந்த் எல் ராயின் தேரே இஷ்க் மெய்ன் மற்றும் மாரி செல்வராஜின் டைட்டில் வைக்கப்படாத ஒரு படம் என்று அடுத்தடுத்து கமிட்டாகி இருக்கிறார்.
ஏற்கனவே தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் காம்பினேஷனில் உண்மை கதையை மையப்படுத்திய கர்ணன் படம் வெளியானது. திருநெல்வேலி மாவாட்டம் பொடியங்குளம் கிராமத்திற்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் பேருந்து நிறுத்தம் மற்றும் அதனால், அந்த கிராம மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி தான் இந்தப் படம் எடுக்கப்பட்டது. என்னதான் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் வசூலிலும், விமர்சன ரீதியாகவும் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் தான் மீண்டும் ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்திய படத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதுவும், 1970 ஆம் ஆண்டுகளில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தனுஷ் படம் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
காதல் சுகுமார் சொன்ன வார்த்தை; சிம்புவுக்கு இந்த ஹிட் பாட்டை எழுதிய டி.ராஜேந்தர்!
தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பைசன்' படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, ரஜீஷா விஜயன், கலையரசன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படம் முடிந்த பிறகு தனுஷ் மற்றும் மாரி செல்வராஜின் படம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் வருவதற்கு எப்படியும் குறைந்தது ஒரு வருடம் ஆகும் என்று சொல்லப்படுகிறது.