நவம்பர் முதல் வாரமே ஓடிடியில் இத்தனை புதுப்படங்கள் ரிலீஸ் ஆகிறதா? முழு லிஸ்ட் இதோ

First Published | Nov 4, 2024, 10:34 AM IST

நவம்பர் முதல் வாரத்தில் சமந்தா நடித்த சிட்டாடெல் முதல் ரஜினியின் வேட்டையன் வரை ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் தொடர் பற்றி பார்க்கலாம்.

OTT Release Movies and Web Series on November 1st week

தமிழ் சினிமாவில் தீபாவளி விருந்தாக ரிலீஸ் ஆன அமரன், லக்கி பாஸ்கர் உள்ளிட்ட புதுப்படங்கள் திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகின்றன. இந்த நிலையில், நவம்பர் மாதம் முதல் வாரத்தில் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் போட்டிபோட்டு ஓடிடி தளங்களில ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள், எந்தெந்த ஓடிடி தளங்களில், எந்த தேதிகளில் ரிலீஸ் ஆக உள்ளன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Vettaiyan

வேட்டையன்

த.செ.ஞானவேல் இயக்கத்தில் கடந்த மாதம் தியேட்டரில் ரிலீஸ் ஆன திரைப்படம் வேட்டையன். இப்படம் தியேட்டரில் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக்குவிக்கவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தீபாவளி ரிலீஸ் படங்களால் வேட்டையன் படம் தியேட்டரில் இருந்து தூக்கப்பட்டுள்ளதால் தற்போது ஓடிடிக்கு தாவி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 8-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... 2024-ல் வசூலில் செஞ்சுரி அடித்த தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ

Tap to resize

ARM

ஏ.ஆர்.எம்

டொவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ஏ.ஆர்.எம். இப்படத்தை ஜிதின் லால் இயக்கி இருந்தார். இப்படமும் வருகிற நவம்பர் 8-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

Kozhipannai Chelladurai

கோழிப்பண்ணை செல்லதுரை

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய சீனு இராமசாமி இயக்கத்தில் கடைசியாக ரிலீஸ் ஆன படம் கோழிப்பண்ணை செல்லதுரை. இப்படத்தில் யோகிபாபுவும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இப்படம் வருகிற நவம்பர் 5-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

Citadel Honey Bunny

சிட்டாடெல் ஹனி பனி

சமந்தா நடிப்பில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ள வெப் தொடர் சிட்டாடெல் ஹனி பனி. இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டீகே இணைந்து இயக்கி உள்ளனர். இதில் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சமந்தா. இந்த வெப் தொடர் வருகிற நவம்பர் 7ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... அமேசான் பிரைமில் கட்டாயம் பார்க்க வேண்டிய டாப் 10 சிறு பட்ஜெட் படங்கள்

Latest Videos

click me!