அதன்படி மொத்தம் 11 போட்டியாளர்கள் நாமினேட் ஆகி உள்ளனர். வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கு இது முதல் வாரம் என்பதால் அவர்கள் யாரும் நாமினேட் செய்யப்படவில்லை. எஞ்சியுள்ள 15 பேரில் இருந்து ஜாக்குலின், சுனிதா, அன்ஷிதா, சாச்சனா, முத்துக்குமரன், அருண், ரஞ்சித், தீபக், விஜே விஷால், பவித்ரா ஜனனி, ஆர்.ஜே.ஆனந்தி ஆகிய 11 பேர் நாமினேட் ஆகி உள்ளனர். கடந்த வாரம் நோ எவிக்ஷன் என்பதால் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர் ரஞ்சித்துக்கு எம்.ஜி.ஆர் வைத்த உண்மையான பெயர் என்ன தெரியுமா?