இந்த வாரம் நோ எலிமினேஷன்; ஆனா தரமா 6 வெடிகுண்டுகளை வீட்டுக்குள் உருட்டிவிட்ட பிக் பாஸ்!

First Published | Nov 3, 2024, 10:48 PM IST

Bigg Boss Tamil Season 8 : ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் 15 பேர் போட்டியிட்டு வரும் நிலையில், நான்காவது வாரத்தில் 6 புதிய போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியில் களமிறங்கியுள்ளனர்.

Vijay Sethupathi

கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கோலாகலமாக துவங்கியுள்ளது. இதுவரை 7 சீசன்களாக உலக நாயகன் கமல் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். இன்று தனது நான்காவது வாரத்தில் உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஏற்கனவே 3 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகியுள்ள நிலையில் இன்று புதிதாக 6 போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியில் உள்ளே பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். 

பாலிவுட் பயணம் குறித்த கேள்வி; நச்சுனு ஓப்பனாக பதில் சொன்ன சூர்யா - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Shiva Kumarr

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 6 புதிய போட்டியாளர்கள் வைல்ட் கார்டு சுற்றில் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள். அதில் விஜய் டிவியில் ஒளிபரப்பான "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்ற மஞ்சரி நாராயணன் ஆறு போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுகிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள முத்துக்குமரனின் தோழி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அதே போல ஒரு சில படங்களில் நடித்தவரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பேரனுமான ஷிவ குமார் இந்த பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ளார். இவருடைய மனைவி சுஜா வருணியும் இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Rayan

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "தமிழும் சரஸ்வதியும்" நாடகத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கியுள்ள நடிகர் தான் ரயான். இவர் துப்பாக்கி சூடுதல் போன்ற பல போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இளம் நடிகராக உருவெடுத்துள்ள அவர் இப்போது பிக் பாஸ் போட்டியில் வைல்ட் கார்டு போட்டியாளராக களம் இறங்கி இருக்கிறார். 

அதேபோல பாடலாசிரியரும், பாடகியும், மாடல் அழகியமான வர்ஷினி வெங்கட் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மிஸ் கோல்டன் பேஸ் ஆப் சவுத் இந்தியா அழகி போட்டியில் இவர் பங்கேற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Raanav

பிக் பாஸ் வீட்டில் மற்றொரு என்ட்ரியாக நடிகர் ராணவ் வைல்ட் கார்டில் நுழைந்திருக்கிறார். இவர் ஏற்கனவே சில தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில கணிப்புகளின் படி, ராணவ் பிக் பாஸ் டைட்டில் வெள்ள கூட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தபடியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருப்பவர் தான் ரியா தியாகராஜன். மிஸ் சென்னை அழகி போட்டிகளில் கலந்து கொண்ட மாடல் அழகி இவர். தனது youtube சேனல் மூலம் அவ்வப்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

"அருவருக்கத்தக்க வகையில் செயல்படும் ப்ளூ சட்டை மாறன்" SKவிற்காக பொங்கிய தமிழ் நடிகர் - என்னாச்சு?

Latest Videos

click me!