மிகப்பெரிய இசை குடும்பத்தில் இருந்து வந்த இசையமைப்பாளனார் யுவன் சங்கர் ராஜா. தனது அக்கா, அண்ணன், அப்பா மற்றும் சித்தப்பா உள்ளிட்டவர்களை போல தமிழ் திரையுலகில் மிகச்சிறந்த கலைஞராக அவர் வலம் வருகிறார். பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிப்பில் வெளியான "அரவிந்தன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் இவர் களமிறங்கினார்.
இப்போது கோலிவுட் உலகின் இளைய இசைஞானியாக அவர் வளம் வந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அக்கால திரைப்பட ரசிகர்களுக்கு இளையராஜாவின் இசை எந்த அளவிற்கு ஒரு போதையாக அமைந்ததோ, அது போல இக்கால இளைஞர்களுக்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை ஒரு போதையாகவே இருந்து வருகிறது என்றால் அதில் சற்றும் மிகையல்ல.