தேடி வந்த விஜய்யின் தளபதி 69 பட வாய்ப்பு; ரிஜெக்ட் பண்ணிய சத்யராஜ்? காரணம் என்ன?

First Published | Nov 3, 2024, 2:47 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சத்யராஜ், நடிகர் விஜய்யின் தளபதி 69 பட வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Sathyaraj

1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர் சத்யராஜ். பின்னர் வயது ஏற ஏற ஹீரோவாக நடிப்பதை குறைத்துவிட்டு குணச்சித்திர வேடங்களில் அதிகளவில் நடிக்க தொடங்கினார். அப்படி அவர் குணச்சித்திர வேடத்தில் நடித்த பாகுபலி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதும், சத்யராஜுக்கு பான் இந்தியா அளவில் மவுசு அதிகரித்தது. பாகுபலி படத்தில் அவர் நடித்த கட்டப்பா கேரக்டர் ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டது. அப்படத்துக்கு பின் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார் சத்யராஜ்.

Coolie Movie Sathyaraj

தமிழில் அவர் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பின் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்கிறார் சத்யராஜ். கூலி படத்தின் படப்பிடிப்பு தற்போது பிசியாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. கூலி படத்தை தொடர்ந்து மரகத நாணயம் 2, ஜாக்சன் துரை 2 போன்ற படங்களையும் லைன் அப்பில் வைத்திருக்கிறார் சத்யராஜ்.

இதையும் படியுங்கள்... ஒரு வருடத்தில் 21 படமா! ஒரே ஆண்டில் அதிக படங்களில் நடித்த தமிழ் ஹீரோஸ் லிஸ்ட் இதோ

Tap to resize

Sathyaraj next movie

அந்த வரிசையில் அவருக்கு நடிகர் விஜய்யுடன் தளபதி 69 படத்தில் நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்திருக்கிறது. ஆனால் அந்த பட வாய்ப்பை சத்யராஜ் மறுத்துவிட்டதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. விஜய்யுடன் இதற்கு முன்னர் தலைவா, மெர்சல் ஆகிய படங்களில் நடித்திருந்த சத்யராஜ், தளபதி 69 படத்தில் நடிக்க மறுத்ததற்கு இரண்டு காரணங்களும் கூறப்படுகிறது. அது என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Sathyaraj rejected Thalapathy 69

அதில் ஒன்று, விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளதால் தளபதி 69 படத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகமோ விஜய்யின் அரசியல் கட்சியை புகழும் வசனங்களோ அல்லது கட்சிக் கொடியோ பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால் அதன்மூலம் விஜய் கட்சியை விளம்பரப்படுத்தி நடிக்க வேண்டாம் என முடிவெடுத்து சத்யராஜ் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மற்றொருபுறம், தளபதி 69 படத்தின் கதையை கேட்டு சத்யராஜ் இம்பிரஸ் ஆகிவிட்டாலும் சம்பள விஷயத்தில் ஒத்துப்போகாததால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் இதில் எது உண்மை என்பது சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் இருந்து கூறினால் தான் தெரியும்.

இதையும் படியுங்கள்... முடிவுக்கு வந்த 38 ஆண்டு காத்திருப்பு.. ரஜினியின் கூலி - ராஜசேகராக கலக்கப்போகும் "உயர்ந்த மனிதன்"!

Latest Videos

click me!