திருமணத்துக்கு முன்பே ஆண் குழந்தை பெற்றெடுத்த ஐஸ்வர்யா ராய்? புயலை கிளப்பிய மகன்!

Published : Nov 03, 2024, 12:24 PM ISTUpdated : Nov 03, 2024, 01:54 PM IST

ஐஸ்வர்யா ராய்க்கு ஆராத்யா என்ற மகள் மட்டுமே உள்ளார். ஆனால் திருமணத்திற்கு முன்பே அவருக்கு ஒரு மகன் பிறந்தார் என்ற செய்தி இணையத்தில் பரவி வருகிறது.   

PREV
15
திருமணத்துக்கு முன்பே ஆண் குழந்தை பெற்றெடுத்த ஐஸ்வர்யா ராய்? புயலை கிளப்பிய மகன்!
Aishwarya Rai

உலக அழகியாக அனைவரையும் கவர்ந்த ஐஸ்வர்யா ராய், தனது கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்டார். அதன் பிறகு மெதுவாக சினிமாவில் நுழைந்த அவர் `இருவர்` படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அனைவரையும் ஈர்த்த ஐஸ்வர்யா ராய், திரையுலகில் most wanted நடிகையாக மாறினார். இதனால் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. குறிப்பாக இந்தியில் அதிக படங்களில் நடித்தார் ஐஸ்வர்யா ராய். அங்கே தொடர் வெற்றிகளை குவித்து, குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.  
 

25
Aishwarya Rai Daughter

சில காலம் பாலிவுட்டை ஆண்ட அவர், அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனுடன் காதல் கொண்டார். அதற்கு முன்பு பல நடிகர்களுடன் டேட்டிங் செய்ததாக வதந்திகள் வந்தன. ஆனால் இறுதியில் அபிஷேக் பச்சன் அவரை 2007 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா (2011) என்ற மகள் பிறந்தார். சமீபத்தில் முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்தில் தனது மகளுடன் ஐஸ்வர்யா மிளிர்ந்தார். இதில் ஆராத்யாவைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தாயை மிஞ்சிய அழகுடன் கவர்ந்தார் ஆராத்யா. விரைவில் அவர் கதாநாயகியாக அறிமுகமாக வாய்ப்புள்ளது. 
 

35
Aishwarya Rai Divorce Rumour

இந்நிலையில், சமீப காலமாக அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பிரிகிறார்கள் என்ற வதந்திகள் அதிகமாக பரவுகின்றன. அம்பானி திருமணத்திலும் இவர்கள் ஒட்டாமல் விலகியே இருந்தனர். மேலும், தற்போது தனித்தனியாக வசிப்பதாகத் தெரிகிறது. இதனால் இவர்களின் விவாகரத்து வதந்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், இதுகுறித்து ஐஸ்வர்யாவோ, அபிஷேக்கோ பதிலளிக்கவில்லை. இதுவும் இந்த வதந்திகளுக்கு வலு சேர்க்கிறது. 

இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா பிரசவ வலி; நெகிழ்ந்து பேசிய அமிதாப் பச்சன்!

45
who is Aishwarya Rai Son

இந்தச் சூழலில், இப்போது ஒரு பரபரப்பான செய்தி இணையத்தில் வைரலாகிறது. ஐஸ்வர்யாவுக்குத் திருமணத்திற்கு முன்பே ஒரு மகன் இருக்கிறாரா? என்பது பரபரப்பாக மாறி வருகிறது. நான் ஐஸ்வர்யா ராயின் மகன் என்று கூறி ஒரு நபர் பேசும் வீடியோ வைரலாகிறது. நான் ஐஸ்வர்யா ராயின் மகன் என்று சங்கீத் குமார் என்ற நபர் பேசிய வீடியோ தான் தற்போது மீண்டும் வைரலாகிறது. இது நான்கு ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயம். அப்போது அவருக்கு வயது 32. ஐஸ்வர்யா ராய்க்கு 15 வயதில் தான் பிறந்ததாகக் கூறினார். லண்டனில் `IVF-In Vitro Fertilization` மூலம் தான் பிறந்ததாகத் தெரிவித்தார். தனக்குத் தாய் ஐஸ்வர்யா ராய் என்றும் லண்டனில் பிறந்த பிறகு அவர்களது பெற்றோர் தன்னை விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்ததாகக் கூறினார். 

55
Actress Aishwarya Rai

ஐஸ்வர்யாவின் பெற்றோர்தான் தன்னை வளர்த்ததாக கூறிய அவர், இருந்தாலும் தனது பிறப்பு தொடர்பான ஆதாரங்கள் அனைத்தையும் அழித்துவிட்டதாகவும், இப்போது தன்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறினார். இதனால் இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் அவர் யார்? ஏன் அப்படிக் கூறுகிறார் என்று விசாரித்ததில், அவருக்கு மனநிலை சரியில்லை என்று தெரியவந்தது. இதனால் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால் இப்போது விவாகரத்துச் செய்திகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த விஷயமும் சமூக ஊடகங்களில் பரவி மீண்டும் ஒருமுறை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்து; அட்வைஸ் கொடுத்தாரா தனுஷ் பட நடிகை?

Read more Photos on
click me!

Recommended Stories