அமரன் முதல் லக்கி பாஸ்கர் வரை; தீபாவளி ரிலீஸ் படங்களை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம்?

First Published | Nov 3, 2024, 11:33 AM IST

தீபாவளிக்கு ரிலீஸ் ஆன அமரன், லக்கி பாஸ்கர், ப்ளடி பெக்கர், பிரதர் போன்ற படங்களை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம் என்பதன் விவரம் இதோ.

Diwali Release Movies

தீபாவளி பண்டிகைக்கு புதுப்படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு தமிழில் 3 படங்களும் ஒரு டப்பிங் படமும் ரிலீஸ் ஆகி இருந்தது. வழக்கமாக விஜய், அஜித், ரஜினி, கமல் ஆகிய உச்ச நட்சத்திரங்கள் படம் தீபாவளிக்கு வரும். ஆனால் இம்முறை அவர்கள் படம் ஒன்று கூட ரிலீஸ் ஆகவில்லை. அதற்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடித்த அமரன், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர், கவின் நடித்த ப்ளடி பெக்கர், ஜெயம் ரவியின் பிரதர் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. அந்த படங்களின் ஓடிடி உரிமையை எந்த தளங்கள் கைப்பற்றி உள்ளது என்பதை பார்க்கலாம்.

Amaran

அமரன்

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்து ரிலீஸ் ஆகி உள்ள படம் அமரன். தீபாவளி விருந்தாக வெளிவந்துள்ள இப்படம் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. மூன்றே நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியுள்ள அமரன் திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இம்மாத இறுதியில் இப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்... அமரன் படத்தால் கடகடவென நிரம்பும் கமலின் கஜானா! 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

Tap to resize

Brother

பிரதர்

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தீபாவளி ரேஸில் வெளிவந்த படம் தான் பிரதர். இப்படத்தை எம்.ராஜேஷ் இயக்கி உள்ளார். பேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து உருவான இப்படம் சற்று கலவையான விமர்சனங்களையே பெற்று உள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படமும் இம்மாதம் ஓடிடிக்கு வருகிறது.

Bloody Beggar

ப்ளடி பெக்கர்

தீபாவளி ரேஸில் களமிறங்கிய மற்றொரு படம் ப்ளடி பெக்கர். கவின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை நெல்சன் தயாரித்துள்ளார். அவரின் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவபாலன் தான் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் ஓடிடி தளம் தான் கைப்பற்றி உள்ளது. இப்படம் இன்னும் சில வாரங்களில் ஓடிடிக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது.

Lucky Baskhar

லக்கி பாஸ்கர்

தீபாவளி பண்டிகையில் சர்ப்ரைஸ் பேக்கேஜ் ஆக வந்த படம் தான் லக்கி பாஸ்கர். வெங்கி அட்லூரி இயக்கிய இப்படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்திருந்த இப்படம் தெலுங்கில் எடுக்கப்பட்டாலும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

இதையும் படியுங்கள்... அருண் விஜய் முதல்... ராஷ்மிகா வரை! தீபாவளி கொண்டாட்டத்தின் ஸ்பெஷல் போட்டோஸ்!

Latest Videos

click me!