நடிச்ச எல்லா படமும் ஹிட்; கோலிவுட்டின் ஜீரோ பிளாப் நாயகி! இந்த குழந்தை யாரென்று தெரிகிறதா?

Published : Nov 03, 2024, 01:38 PM IST

பிரபல இயக்குனரின் மகள் ஒருவர் தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். அவரின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

PREV
17
நடிச்ச எல்லா படமும் ஹிட்; கோலிவுட்டின் ஜீரோ பிளாப் நாயகி! இந்த குழந்தை யாரென்று தெரிகிறதா?
Actress Childhood Photo

பாலிவுட்டில் நெப்போட்டிசம் என்பது பேசு பொருளாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் அதற்கு பெரியளவில் எதிர்ப்பு இருக்காது. ஏனெனில் இங்கு சினிமா வாரிசுகளாவே இருந்தாலும் திறமை இருந்தால் தான் அவர்களால் சாதிக்க முடியும். அதற்கு மிகப்பெரிய எடுத்துக் காட்டு சூர்யா, விஜய், கார்த்தி போன்ற ஹீரோக்கள் தான். அவர்கள் அனைவருமே இன்று டாப் ஹீரோவாக இருப்பதற்கு அவர்களின் விடாமுயற்சியே காரணம்.

27
Aditi shankar

அதேபோல் நடிகைகளில் ராதாவின் மகள்கள் கார்த்திகா, துளசி, பாக்கியராஜின் மகள் சரண்யா, கமல்ஹாசன் மகள் அக்‌ஷரா ஆகியோர் வந்த வேகத்தில் காணாமல் போயினர். இவர்களைப் போலவே ஒரு வாரிசு நடிகையாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் ஒரு பிளாப் படம் கூட கொடுக்காமல் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார் ஒரு நடிகை. அவரின் குழந்தைப்பருவ புகைப்படம் தான் தற்போது செம்ம வைரலாகி வருகிறது.

37
Shankar Daughter Aditi

அவர் வேறுயாருமில்லை நடிகை அதிதி ஷங்கர் தான். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான இவர், எம்பிபிஎஸ் படித்திருந்தாலும், நடிப்பின் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்ததால் படித்து முடித்த கையோடு சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். இவர் தமிழில் முதன்முதலில் நடித்த படம் விருமன். 

இதையும் படியுங்கள்... இவங்கெல்லாம் மருத்துவர்களா! டாக்டர் வேலையை தூக்கியெறிந்துவிட்டு சினிமாவில் டூயட் பாடும் ஹீரோயின்ஸ் இதோ

47
Aditi shankar Childhood Photos

கிராமத்து கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் அதிதி. விருமன் திரைப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. முத்தையா இயக்கிய இப்படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தி இருந்தார் அதிதி. அப்படத்தில் அதிதியின் நடிப்புக்கு விருதுகளும் கிடைத்தன.

57
Aditi shankar Rare Photos

விருமன் படத்தின் வெற்றிக்கு பின்னர் அதிதி ஷங்கருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் மாவீரன் திரைப்படம். பேண்டஸி படமான இதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அதிதி. இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கி இருந்தார். இப்படமும் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

67
Actress Aditi shankar

இப்படி கோலிவுட்டில் அதிதி நடிப்பில் வெளிவந்த இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றியை ருசித்துள்ளன. இதன்மூலம் கோலிவுட்டில் ஜீரோ பிளாப் நாயகியாக வலம் வருகிறார் அதிதி ஷங்கர். அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. அவர் கைவசம் தற்போது 2 திரைப்படங்கள் உள்ளன.

77
Tamil Cinema Heroine Aditi shankar

அதில் ஒரு படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி இருக்கிறார். அப்படத்தில் நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அதிதி ஷங்கர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நேசிப்பாயா என பெயரிட்டுள்ளனர். ரொமாண்டிக் படமாக இது தயாராகி இருக்கிறது. மற்றொரு படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார் அதிதி. இப்படத்திற்கு ஒன்ஸ் மோர் என பெயரிடப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... 50 கோடி சம்பளம்... ராஜபோக வாழ்க்கை வாழும் இயக்குனர் ஷங்கரின் Net Worth எவ்வளவு தெரியுமா?

click me!

Recommended Stories