கதை பிடிக்காமல் நடித்த ரஜினி; ஆனால் படம் பார்த்த பின் இயக்குனரை கட்டியணைத்து கண்கலங்கிய தருணம்!

Ansgar R |  
Published : Nov 03, 2024, 04:55 PM IST

Rajinikanth : கதை பிடிக்காமல் ஒரு படத்தில் நடிக்க தொடங்கிய ரஜினிகாந்த், ஒரு கட்டத்தில் அப்பட்டத்தின் கதையை முழுமையாக புரிந்து கொண்டு, இயக்குனரை கட்டித்தழுவி கண்கலங்கிய சம்பவம் நடந்திருக்கிறது.

PREV
14
கதை பிடிக்காமல் நடித்த ரஜினி; ஆனால் படம் பார்த்த பின் இயக்குனரை கட்டியணைத்து கண்கலங்கிய தருணம்!
Rajinikanth

கர்நாடகாவில் பிறந்து, பேருந்து நடத்துனராக தனது பயணத்தை தொடங்கி. அதன்பிறகு சினிமா ஆசையோடு சென்னை வந்து, மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் முறையாக நடிப்பு குறித்த பயிற்சிகளை எடுத்துக்கொண்டு. பிறகு தனது குருநாதர், இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் இயக்கத்தில் கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கிய நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

தமிழ் திரையுலகை பொருத்தவரை அவரை அறிமுகம் செய்தது பாலச்சந்தர் என்றாலும் அவரை ஒரு ஆக்சன் ஹீரோவாக உருவெடுக்க வைத்த இயக்குனர் எஸ்.பி முத்துராமன். அதேபோல அவரை ஒரு சிறந்த குணசித்திர நடிகராக தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் செய்தது மறைந்த இயக்குனர் மகேந்திரன் என்றால் அது மிகையல்ல.

நடிச்ச எல்லா படமும் ஹிட்; கோலிவுட்டின் ஜீரோ பிளாப் நாயகி! இந்த குழந்தை யாரென்று தெரிகிறதா?

24
Mahendran

தமிழ் சினிமாவை பொறுத்தவரை மகேந்திரன் மற்றும் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பல திரைப்படங்கள் மெகா ஹிட் திரைப்படங்களாக மாறியிருக்கிறது. அதிலும் குறிப்பாக 1975ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை உலகில் அறிமுகமாகிய நிலையில், 1980 ஆம் ஆண்டுக்குள், அதாவது அவர் திரைத்துறையில் அறிமுகமான ஐந்து ஆண்டுக்குள் 60க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருந்தார். 

இதில் பல திரைப்படங்கள் மகேந்திரன் மற்றும் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

34
SP Muthuraman

இந்த சூழலில் 1979 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தம் செய்யப்படுகிறார். அதற்கான ஷூட்டிங் பணிகளும் தொடங்குகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த திரைக்கதையின் ஓட்டம் அவருக்கு பெரிய அளவில் பிடிக்கவில்லை. தினமும் சூட்டிங் வரும்பொழுது இயக்குனர் எஸ்.பி முத்துராமனுக்கும், ரஜினிகாந்திற்கும் ஏதோ ஒரு வகையில் இந்த கதை சம்பந்தமாக வாக்குவாதம் நடந்து கொண்டே இருந்திருக்கிறது. 

ஒரு கட்டத்தில் மேற்கொண்டு இந்த திரைப்படத்தில் நடிக்க ரஜினிகாந்திற்கு விருப்பம் இல்லாமல் போக, எஸ்.பி முத்துராமன் ரஜினியை நேரில் சந்தித்து, இன்னும் 5000 அடி இந்த திரைப்படத்தை உங்களை வைத்து எடுக்கிறேன். அதை உங்களுக்கு போட்டும் காட்டுகிறேன், அது பிடித்திருந்தால் தொடர்ந்து நடியுங்கள். இல்லையென்றால் வேறு கதை உங்களுக்கு நான் கூறுகிறேன் என்று சவாலாகவே கூறியிருக்கிறார். இதை ஒப்புக்கொண்ட ரஜினிகாந்த், அந்த படத்தில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்துள்ளார்.

44
Aarilirunthu arubathu varai

இயக்குனர் எஸ்.பி முத்துராமன் கூறியதை போலவே, சுமார் 5000 அடி திரைப்படம் எடுக்கப்படுகிறது. அதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் போட்டுக் காட்டப்படுகிறது. படத்தில் உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து வியந்து போன ரஜினிகாந்த், இயக்குனர் எஸ்.பி முத்துராமனை இருக பற்றி கொண்டு கண்ணீர் மல்க நன்றி கூறினாராம். உண்மையில் நீங்கள் இப்படி ஒரு விஷயத்தை என்னிடம் சொல்லாமல் இருந்திருந்தால், ஒரு நல்ல திரைப்படத்தை நான் இழந்திருப்பேன் என்று அவர் கூறினாராம். அந்த திரைப்படம் தான் 1979ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில், பஞ்சு அருணாசலத்தின் கதையில், இளையராஜாவின் இசையில் வெளியான "ஆறிலிருந்து அறுபதுவரை" என்கின்ற திரைப்படம்.

தேடி வந்த விஜய்யின் தளபதி 69 பட வாய்ப்பு; ரிஜெக்ட் பண்ணிய சத்யராஜ்? காரணம் என்ன?

Read more Photos on
click me!

Recommended Stories