தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் தில் ராஜு. இவர் தற்போது தமிழ் தெலுங்கில் தயாராகி வரும் ஆர்.சி.15 படத்தை தயாரித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் இப்படத்தில் நடிகர் ராம்சரண் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அஞ்சலி நடித்துள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... பாலிவுட் நடிகைக்கு நோ சொல்லிவிட்டு... தன்னைவிட 20 வயது குறைவான நடிகையுடன் ஜோடி சேர ஆசைப்படும் எஸ்.கே
இந்நிலையில், தற்போது 51 வயதாகும் தில் ராஜுவுக்கு இரண்டாவது மனைவி தேஜஸ்வினி மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தளபதி 66 படத்துக்கு வாரிசு என பெயர் வைத்த ராசியால் தான் அவருக்கு ஆண் வாரிசு பிறந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதுதவிர சோசியல் மீடியாவில் தில் ராஜு - தேஜஸ்வினி தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.