டி பிளாக் மூவி டீம் :
நீண்ட இடைவெளிக்கு பிறகு அருள் நிதியின் படம் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தை எம்என்எம் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இதில் கரு பழனியப்பன், சரண்தீப், தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா மற்றும் உமா ரியாஸ் கான் உள்ளிட்ட துணை நடிகர்களுடன் நாயகனாக அருள்நிதி, நாயகியாக அவந்திகா மிஸ்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...ஜிம்மிலிருந்து கட்டு மஸ்தான அழகுடன் நேஹா ஷர்மா, மலைக்கா அரோரா கான் .. அனல் பறக்கும் போட்டோஸ் இதோ!
அடர்ந்த காட்டில் கல்லூரி :
அருள் நிதி மாணவராக செல்லும் கல்லூரி அடர்ந்த காட்டிற்கு மத்தியில் அமைத்துள்ளது. இக்கல்லூரி வளாகத்தை விட்டு மாலை நேரத்திற்கு பிறகு வெளியில் வருவது ஆபத்து என கல்லூரி நிறுவனம் அருவுறுத்துகிறது. இதனால் எக்ஸைட் ஆனா மாணவர்கள் என்னதான் இருக்கும் என பார்ப்பதற்காக முனைகின்றனர்.