நடிகர் மாதவனின் முதல் இயக்குனர் முயற்சியான ராக்கெட்ரி: நம்பி எஃபெக்ட் இன்று வெளியாகியுள்ளது. சிம்ரன் நாயகியாக நடித்துள்ள இந்த படம் இந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ளது.
25
Rocketry: The Nambi Effect
இஸ்ரோ முன்னாள் ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில் இளமை முதல் முதுமை வரையிலான காலங்கள் காட்டப்பட்டுள்ளது.நம்பி நாராயணன் ரோலில் மாதவன் நடித்துள்ளார்.
முன்னதாக கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட இந்த படத்திற்கு பிரதமர் முதல் அமைச்சர்கள், பிரபலங்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர். ராக்கெட்டிரி: நம்பி எஃபெக்ட் விண்வெளி காட்சிகளுடன் துவங்குகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள நம்பி நாராயணனின் வீட்டுடன் நாயகனுக்கு என்ட்ரி கொடுக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களுடன் உணவு உண்ணும் தருணத்தில் அதிரடியாக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பெயரில் நம்பி கைது செய்யப்படுகிறார்.
நம்பியின் மனைவி உறவினர்களால் அவமானப்படுத்தப்படுகிறார். அவரது மகள் முகத்தில் யாரோ சாணத்தை வீசுகிறார்கள். மருமகனும் தாக்கப்படுகிறார். நெஞ்சை உலுக்கும் காட்ச்சியமைப்புடன் அமைந்துள்ளன காட்சிகள். பின்னர் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் ஷாருக்கானுடன் நேர்காணலில் நாயகன் காட்டப்படுகிறார். ஃப்ளாஷ்பேக் காட்சிகளின் மூலம் அவரது கஷ்டங்களை காட்சிப்படுத்தப்படுகிறது. பின்னர் சிரியில் நம்பிக்கு நிகழும் இன்னல்கள் என இருக்கை நுனி காட்சிகளுடன் வரவேற்பை பெற்றது ராக்கெட்டாரி.
நம்பியின் மனைவி மீனாவாக நடிகர் சிம்ரன், சிபிஐ விசாரணை அதிகாரியாக பி.எம். நாயராக கார்த்திக் குமார், உன்னியாக சாம் மோகன், பரமாக ராஜீவ் ரவீந்திரநாதன், சர்தாஜாக பவ்ஷீல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இதில் நடித்து குறித்து பதிவிட்டுள்ள சிம்ரன், பார்த்தாலே பரவசம் படத்தில் சிமி & டாக்டர் மாதவன் வேடத்தில் இருந்து கன்னத்தில் முத்தமிட்டால் இந்திரா & திரு வரை, மிஸ்டர் அண்ட் மிஸஸ் நம்பி நாராயணன் வேடத்தில் பெரிதாக எதுவும் மாறவில்லை. என குறிப்பிட்டுளார்.