கமலின் விக்ரம் படம் இதுவரை பெற்ற வசூல் வேட்டை எவ்வளவு தெரியுமா.?

First Published | Jul 1, 2022, 5:59 PM IST

கடந்த 3-ம் தேதி வெளியான விக்ரம் அனல் இன்னும் ஓயவில்லை. இந்நிலையில் உலகநாயனின் பட வசூல் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

vikram

விஜய் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படைப்பாக விக்ரம் படத்தை உருவாக்கி உள்ளார். விஸ்வரூபம் 2 வுக்கு பிறகு நான்கு ஆண்டு இடைவேளைக்கு பிறகு வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் ரிலீசுக்கு முன்பே எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. 

vikram

மாஸ்டரில் விஜய்க்கு வில்லனாக இருந்த விஜய்சேதுபதி இதில் விக்ரம் கமலுக்கு வில்லனாக மாஸ் காட்டி இருந்தார். இரண்டு தங்க பற்களுடன் வெர்லெவல் வில்ல தனத்தை காட்டி இருந்தார். வித்யாசமான போதத்தை பொருளை சுவைத்தவுடன் ராட்சசனாக மாறும் இவரது நடிப்பு ஈர்த்திருந்தது.

மேலும் செய்திகளுக்கு... Santhanam : கட்டுமான ஒப்பந்ததாரரை தாக்கிய வழக்கு... நடிகர் சந்தானத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Tap to resize

vikram

அதேபோல மலையாள உலகில் அதிக பேரால் அறியப்பட்ட நடிகரான பகத் பாசில் முதல் வில்லனாக தோன்றினால் பின்னர் கமலுடன் நட்பு பாராட்டுகிறார். நாயகன் குறித்த இவரின் பில்டப் ரசிக்கும் வண்ணம் இருந்தது. அதேபோல ரோலெக்ஸ் 10 நிமிட தரமான சம்பவம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு... மீனாவை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன அமைச்சர் பொன்முடி !

vikram

மாஸான பிஜியதுடன் அதிரடி சண்டை காட்சிகளுடன் மிரள வைத்த இந்த படம் ஓப்பனிங்கே பட்டையை கிளப்பியது . அதோடு குறிகிய காலத்தில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து உலகளாவிய 300 பாக்ஸ் ஆபிசில் கமலை சேர்த்து. இது தான் கமலின் முதல் சாதனை படமாக உள்ளது.  உலகம் முழுதும் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா மூவியாக வெளியான இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டது.

மேலும் செய்திகளுக்கு... மகளுடன் மழையில் ஆட்டம் .. ஸ்ரேயா சரணின் - கியூட் வீடியோ!

vikram

படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனருக்கு கார், துணை இயக்குனர்களுக்கு பைக் என மாஸ் காட்டிய கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் தான் விக்ரம் படத்தை தயாரித்தது. இந்நிலையில் சமீபத்திய விக்ரம் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படம் இதுவரை 415 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest Videos

click me!