meena
நடிகை மீனா வின் கணவர் கடந்த செவ்வாய்கிழமை உயிரிழந்தார். முன்னதாகவே நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்ட வித்யாசாகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இவருடன் ஒட்டு மொத்த குடும்பமும் பாதிக்கப்பட்டதாகவும் கணவர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் இந்த மீனா தனது சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்திருந்தார்.
meena
இதையடுத்து மீனாவின் கணவர் இறப்பு குறித்து ரசிகர்களும், பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதோடு மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு சரத்குமார், ரஜினிகாந்த , சங்கிதா, குஷ்பூ , மன்சூர் அலிகான் உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு... Radha Ravi : தமன்னாவை சுத்தி சுத்தி பார்த்து சர்ச்சையில் சிக்கிய ராதா ரவி
meena
துக்கத்தில் உள்ள மீனாவிற்கு பிரபலங்கள் ஆறுதல் கூறி வரும் நிலையில் தற்போது திமுக அமைச்சர் பொன்முடி மீனாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். வித்யாசாகரின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் மீனாவிற்கு ஆறுதல் கூறும் புகைப்படம் வெளியாகியுள்ளது. மீனா உடன் நடன இயக்குனர் கலா உள்ளார்.