தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கும் வனிதா விஜயகுமார், அடிக்கடி ஏதாவது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு, மீடியாக்களுக்கு கன்டென்ட் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தான் தற்போது பப்பில் தன்னுடைய ரசிகர்கள் சிலருடன் இவர் எடுத்து கொண்ட, செல்பி போட்டோஸ் படு வைரலாகி வருகிறது.
26
Vanitha Vijayakumar Strong Come back in Bigg Boss
வனிதா விஜயகுமார், திருமணத்திற்கு பின் முழுமையாக திரையுலகை விட்டு விலகினாலும்... அடிக்கடி இவரை பற்றிய செய்திகள் ஏதேனும் ஒரு விதத்தில் வெளியாகி கொண்டு தான் இருந்தது. குறிப்பாக கணவரை விவாகரத்து செய்த பின்னர், இவர் தன்னுடைய குழந்தை விஜய் ஸ்ரீஹரியை மீட்க ஒரு தாயாக மேற்கொண்ட போராட்டம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத ஒன்று.
ஆனால் வனிதாவுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய குடும்பத்தினரே, எதிராக மாறியதாலும்... வனிதாவின் மகன் அப்பாவுடன் தான் இருப்பேன் என்பதில் உறுதியாக இருந்ததாலும், வனிதா தற்போது வரை தன்னுடைய மகள் ஜோவிகாவுடன் இருக்கும் நிலை உருவானது. எனினும் அவ்வப்போது தன்னுடைய பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக, தன்னுடைய மகன் பிறந்தநாள் மற்றும் விஜய் ஸ்ரீஹரியின் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியான போது தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.
46
Bigg Boss Vanitha Vijayakumar
ஃபீல்ட் அவுட் ஆன வனிதா விஜயகுமார்... வத்திக்குச்சி வனிதாவாக மீண்டும் கம் பேக் கொடுத்தது, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான். முடிந்தவரை தன்னுடைய முழு ஈடு பாட்டுடன் விளையாடியதன் பலனாகவே, பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகி வெளியே போன பிறகும்.. மீண்டும் பிக்பாஸ் வீட்டின் உள்ளே வைல்டு கார்டு போட்டியாளராக ரீ-என்ட்ரி கொடுத்தார். அடுத்தடுத்து தனக்கான சரியான வாய்ப்புகளை அமைத்து கொண்ட வனிதா விஜயகுமார், பவர் ஸ்டாருக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்த பிக்கப் ட்ராப் திரைப்படம் சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.
இதை தொடர்ந்து, ஏற்கனவே வனிதாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கியவரான ராபர்ட் மாஸ்டருக்கு ஜோடியாக வனிதா நடித்து முடித்துள்ள திரைப்படம் 'மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ்'. இந்த படத்தில் வனிதா விஜயகுமார் ஹீரோயினாக நடித்துள்ளது மட்டும் இன்றி, இந்த படத்தை தயாரித்தும் உள்ளார்.
66
Vanitha Vijayakumar Pub Photos
படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க தற்போது வனிதா விஜயகுமார் பப்பில் தன்னுடைய ரசிகர்களுடன் எடுத்து கொண்ட சில புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட, அது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.