விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குருபூஜை! தளபதி விஜய்க்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த விஜய பிரபாகரன்!

First Published | Dec 27, 2024, 6:41 PM IST

நடிகரும் - அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நாளை அனுசரிக்கப்பட உள்ள நிலையில், இதற்க்கு தளபதி விஜய்க்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார் விஜய பிரபாகரன்.
 

Captain Vijayakanth

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். நடிகர் என்பதை தாண்டி தயாரிப்பாளராகவும் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் ஏராளமான ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை ரசிக்கப்பட்டு வருகிறது. நடிகர் சங்க தலைவர் பதவி ஏற்ற பின்னர், நடிகர் சங்கம் மீது இருந்த கோடிக்கணக்கான கடனை நட்சத்திர விழா நடத்தி, அதனை அடைத்த பெருமை விஜயகாந்துக்கு உண்டு.

Successful Men in Politics and Cinema

சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டியது மட்டும் இன்றி தேமுதி கட்சியை துவங்கி தேர்தலை சந்தித்த விஜகாந்த், பின்னர் ஆதிமுகவிடம் இருந்து பிரிந்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். அதிமுக தலைமையாக இருந்த, முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்த்து பேசுவதற்க்கே பலர் அஞ்சிய போது, அதிரடியாக தன்னுடைய கருத்துக்களை கூறி எதிர்த்தவர் விஜயகாந்த். தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வந்த போது தான் இவருடைய உடல் நிலை பாதிக்கப்பட்டு, வீட்டுக்குளேயே முடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார்.

மருமகள் சோபிதா பற்றி நாகார்ஜூனா கூறிய கருத்து; என்ன சொன்னார் தெரியுமா?

Tap to resize

Vijayakanth Hospitalized Last Year

7 ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நல பாதிப்புகளுடன், மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் கடந்த ஆண்டு நுரையீரலில் சளி காரணமாகவும், மூச்சு திணறல் காரணமாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை கொடுத்த போதிலும், சிகிச்சைக்கு இவருடைய உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 28-ஆம் தேதி உயிரிழந்தார்.

Vijayakanth Son Invite thalapathy Vijay

இவரது மரணம் ஒட்டு மொத்த திரையுலகினரையும், தமிழக மக்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. இவரின் இழப்பில் இருந்து மீண்டு வர முடியாமல் தற்போது வரை பல ரசிகர்கள் தவித்து வருகிறார்கள். மேலும் இவர் செய்த உதவிகளை, அவரது ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்நிலையில் விஜயகாந்த் மறைந்து, நாளையுடன் 1 வருடம் ஆவதை குருபூஜையாக அனுசரிக்க அவரின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ள நிலையில், இதற்காக அணைத்து அரசியல்வாதிகளுக்கும் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுவருகிறது.

புது வரவுகளால் TRP-யில் அதள பாதாளத்துக்கு போன விஜய் டிவி; டாப் 5 லிஸ்டில் கூட இடம்பிடிக்காத சோகம்!

Vijayakanth First Death Anniversary

அந்த வகையில் தளபதி விஜய்யை சந்தித்து, கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அழைப்பிதழ் மட்டும் நினைவு பரிசாக விஜயகாந்தின் சிலையையும் கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!