59 வயதில் 3ஆவது டிகிரி – ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸான நடிகர் முத்துக்காளை M.A , B. Lit!

First Published | Dec 27, 2024, 4:24 PM IST

Muthukalai Completed B Lit Tamil With First Class : காமெடி நடிகரான முத்துக்காளை தன்னுடைய 59ஆவது வயதில் 3ஆவது டிகிரியை ஃபர்ஸ்ட் கிளாஸில் தேர்ச்சி பெற்று முதல் பட்டதாரியாகியுள்ளார்.

Muthukalai Education

Muthukalai Completed B Lit Tamil With First Class : கல்விக்கு மட்டும் வயதில்லை. ஒருவரை சான்றோராக்குவது கல்வி மட்டுமே. யாராலையும் அழிக்க முடியாத ஒரே சொத்து கல்வி. இதற்கு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. அதோடு கல்விக்கு மட்டும் எண்டும் கிடையாது, எல்லையும் கிடையாது. அப்படிப்பட்ட கல்வியில் இப்போது காமெடி நடிகர் முத்துக்காளை 3ஆவது டிகிரியை ஃபர்ஸ்ட் கிளாஸில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

Actor Muthukalai Completed Blit Tamil With First Class

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள திருகோவில்புரம் என்ற ஊரில் 1965 ஆம் ஆண்டு பிறந்து வளர்ந்தவர் நடிகர் எஸ் முத்துக்காளை. பள்ளியில் நடிக்கும் போதே கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்றுள்ளார். 1990 ஆம் ஆண்டு சென்னை வந்த முத்துக்காளை ஆரம்பத்தில் ஏவிஎம் ஸ்டூடியோவில் 3 ஆண்டுகள் கார்பெண்டர் வேலை செய்துள்ளார். அதன் பிறகு ஒரு சில படங்களில் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து வந்த முத்துக்காளை அதன் பிறகு வடிவேலு உடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமானார்.

Tap to resize

Muthukalai Movies

அதிலேயும் செத்து செத்து விளையாடுவோமா என்ற காட்சி ரசிகர்களை வியக்க வைத்தது. காதலன் படத்தில் ஊர்வசி ஊர்வசி என்ற படலுக்கு நடனம் ஆடியிருந்தார். பொன்மனம், என் உயிர் நீ தானே, நிலவே முகம் காட்டு, சுயம்வரம், இரணியன், 12பி, தவசி, என் புருஷன் குழந்தை மாதிரி, பம்மல் கே சம்பந்தம், தமிழன், பஞ்சதந்திரம், யூத், கார்மேகம் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

Actor Muthukaalai Filmography

நடிப்பையும் தாண்டி படிப்பிலும் கலக்கியிருக்கிறார். தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் 2017 ஆம் ஆண்டு BA HISTORYயில் 2ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தார். இதையடுத்து 2019 ஆம் ஆண்டு MA TAMIL முதல் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருந்தார். இந்த நிலையில் தான் இப்போது B.Lit தமிழ் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் மூலமாக 3 டிகிரி படித்து முடித்துள்ளார்.

Comedy Actor Muthukaalai Education

ஒரு பட்டதாரியாக வேண்டும் என்ற கனவு இப்போது 3 பட்டங்களை வென்றுள்ளார். தனது கனவு இப்போது நிறைவேறிவிட்டது என்று கூறி முத்துக்காளை மகிழ்ச்சி அடைந்துள்ளார். 3ஆவது பட்டம் வென்ற முத்துக்காளைக்கு பாராட்டு குவிந்து வருகிறது. தற்போது 59 வயதாகும் முத்துக்காளை 1994 ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு லாக்டவுன் டைரி, கிக், சந்திரமுகி 2, இந்த கிரைம் தப்பில்ல, ஸ்ரீ சபரி அய்யப்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு முடக்கருத்தான், ரத்னம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Latest Videos

click me!