Naga Cahitanya and Samantha Divorce
பல்லாவரத்து பேரழகியான நடிகை சமந்தாவை உருகி உருகி காதலித்து, திருமணம் செய்து கொண்ட நடிகர் நாக சைதன்யா, 4 வருடத்தில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். சமந்தாவை விவாகரத்து செய்த ஒரு வருடத்திலேயே தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா, பாலிவுட் மற்றும் கோலிவுட் படங்களில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவை காதலிக்க துவங்கினார்.
Nagarjuna Dating with Sobitha
இரண்டு வருடங்களுக்கும் மேலாக இவர்கள் இருவரும் ரகசியமாக டேட்டிங் செய்து வந்தனர். சோபிதா-நாக சைதன்யா இருவரும் வெளிநாட்டிற்கு ஜோடியாக சென்றபோது எடுத்து கொண்ட புகைப்படங்களும் வைரலானது.
ஆனால் தொடர்ந்து தங்களின் காதல் வதந்திகளை மறுத்து வந்த நாக சைதன்யா, சோபிதா ஆகஸ்ட் 8 ஆம் தேதி, குடும்பத்தினர் சம்மதத்துடன் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். நாகார்ஜுனாவின் ஹைதராபாத் இல்லத்தில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி இந்த தகவலை உறுதி செய்தன. நாகார்ஜுனாவும் எக்ஸ் தள பக்கத்தில் இந்த தகவலை உறுதி செய்து மருமகள் சோபிதாவை வரவேற்றார்.
புது வரவுகளால் TRP-யில் அதள பாதாளத்துக்கு போன விஜய் டிவி; டாப் 5 லிஸ்டில் கூட இடம்பிடிக்காத சோகம்!
Naga Chaitanya and Sobitha Wedding
இதை தொடர்ந்து டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நாக சைதன்யா-சோபிதா திருமணம் எளிமையாக நடந்தது. 300 பேர் மட்டுமே திருமணத்திற்கு அழைக்கப்பட்டனர். நாக சைதன்யா - சோபிதா விருப்பப்படி திருமணம் எளிமையாக நடந்ததாக நாகார்ஜுனா விளக்கம் கொடுத்தார். இந்நிலையில், நாகார்ஜுனா தனது புதிய மருமகள் சோபிதாவைப் பகிர்ந்து கொண்ட கருத்து வைரலாகி வருகிறது.
Nagarjuna Opinion
நாக சைதன்யாவை சோபிதா காதலிக்க துவங்குவதற்கு முன்பே சோபிதாவுடன் நாகார்ஜுனாவுக்கு பழக்கம் இருந்ததாம். மேலும் சோபிதா துலிபாலா கடுமையாக உழைத்து தான் இந்த நிலையை அடைந்துள்ளார். வேலையில் அவர் எப்போதும் தரத்துக்கு தான் முன்னுரிமை கொடுப்பார். எப்போதும் அமைதியாக இருப்பார். நாக சைதன்யாவின் மனைவியாக சோபிதா வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று நாகார்ஜுனா கூறினார். புதிய மருமகளின் ஆளுமை, மற்றும் கடின உழைப்பை நாகார்ஜுனா பாராட்டினார்.
அட்லீ தயாரிப்பில் வெளியான பேபி ஜான்; முதற்கட்ட வசூல் எத்தனை கோடி தெரியுமா?
Nagarjuna Hearty Welcome Daughter in law Sobitha
சோபிதாவை நாகார்ஜுனா விரும்புகிறார், என்பது தெரிந்த பின்னர் மனப்பூர்வமாக சோபிதா துலிபாலாவை நாகர்ஜுனா மருமகளாக ஏற்றுக்கொண்டார் என்பது அவரது கருத்துக்கள் மூலம் தெரிகிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் சோபிதா ஒரு தெலுங்குப் பெண் ஆவார். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தெனாலியில் பிறந்த சோபிதா விசாகப்பட்டினத்தில் படித்தார். மும்பை சென்று மாடலிங் செய்தார். பல விளம்பரங்களில் நடித்தார். பின்னர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
Sobitha Dhulipala Quit Cinema
தெலுங்கில் 'குடாச்சாரி', 'மேஜர்' படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான சோபிதா, தற்போது படப்பிடிப்பில் உள்ள 'குடாச்சாரி 2' படத்திலும் நடிக்கிறார் என கூறப்படுகிறது. அதே நேரம் பலர் சோபிதா திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு விலக வாய்ப்புள்ளதாகவும் கூறி வருகிறார்கள். ஆனால் இது குறித்து சோபிதா தரப்பில் இருந்து அதிகார பூர்வமாக அறிவிப்புகள் வெளியாகவில்லை.
லிவிங் டூ கெதர் ஓகே பட் கல்யாணம் வேண்டாம்! அப்பா கமல்ஹாசனையே மிஞ்சிவிட்டாரா மகள் ஸ்ருதி!
Naga Chaitanya upcoming Movie
நாக சைதன்யா 'தண்டேல்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளுக்கு வரவுள்ளது. இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குனர் சந்து மொண்டேட்டி ஒரு உணர்ச்சிமிக்க காதல் படமாக இதை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை அல்லு அர்ஜுன் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.