
திரைப்படங்களுக்கு நிகரான வரவேற்பை பெற்று வருகிறது, சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள். குறிப்பாக பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு கூடுதல் வரவேற்பு கிடைத்து வருகிறது. இளம் ரசிகர்கள் மைண்ட் செட்டுக்கு ஏற்றாப்போல், காதல், காமெடி, எமோஷன் என அனைத்தும் கலந்த கலவையாக சீரியல்கள் உள்ளதால், இல்லத்தரசிகளை தாண்டி ஏராளமான இளம் ரசிகர்களும் சீரியலை விரும்பி பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த வருடத்தின் 51 வது வாரம் ஒளிபரப்பான சீரியல்களின் டாப் 10 இடத்தை கைப்பற்றிய தொடர்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த மாதம் டிஆர்பில் சற்று சரிவை சந்தித்து வந்த 'சிங்க பெண்ணே' சீரியல் இந்த வாரம் முதல் இடத்தை பிடித்துள்ளது. தன்னை அழகன் என்கிற பெயரில் காதலித்தது அன்பு தான் என்பதை அறிந்து கொண்ட ஆனந்தி, அன்புவை மனதார காதலிக்க துவங்கி விட்டார். ஆனால் அன்புவின் அம்மா தன்னுடைய அண்ணன் மகள் துளசிக்கு அன்புவை திருமணம் செய்து வைக்க தீவிரமாக உள்ளார். மகேஷும், அன்பு மற்றும் ஆனந்தி இடையே எதுவும் இல்லை என்பதை நிரூபித்து அன்புக்கு திருமணம் செய்யும் எண்ணத்தில் உள்ளார். பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் 'சிங்க பெண்ணே' சீரியல் இந்த வாரம் 10.3 டிஆர்பி புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
அட்லீ தயாரிப்பில் வெளியான பேபி ஜான்; முதற்கட்ட வசூல் எத்தனை கோடி தெரியுமா?
இதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சுவாதி கொண்டே மற்றும் நியாஸ் கான் நடித்து வரும் 'மூன்று முடிச்சு' தொடர் உள்ளது. ஹீரோவின் அக்கா - தங்கைகள், நந்தினியை ஏதேனும் பிரச்சனையில் சிக்க வைத்து அவரின் எமோஷனுடன் விளையாடி வரும் நிலையில், இவை அனைத்தையும் கடந்து எப்படி நந்தினி ஹீரோ மனதில் இடம் பிடித்து, அந்த வீட்டில் வாழ போகிறார் என்பதே இந்த சீரியலில் கதைக்களமாக உள்ளது இந்த தொடர், 9.92 டிஆர்பி புள்ளிகளை கைப்பற்றியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கடந்த சில வாரங்களாக டிஆர்பி-யில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்த 'கயல்' சீரியல் 9.80 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. தற்போது சரவண வேலுவின் என்ட்ரி தான் இந்த சீரியலில் சூடேற்றி வருகிறது.
விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய கேப்பியல்லா மற்றும் ராகுல் நடித்துவரும் மருமகள் சீரியல், இந்த வாரம் 9 .13 டிஆர்பி புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. தன்னுடைய அக்கா இறந்த பின்னர், அக்கா கணவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு, அக்காவின் மகளை கொடுமை படுத்தி வரும் சித்தி, ஆதிரையின் சொத்தை தந்திரமாக பேசி தன் பெயரில் ரிஜிஸ்டர் செய்து கொண்டு, ஆபத்து நேரத்தில் கூட உதவ முன் வராமல் உள்ளார். ஆதிரை தனக்கு வந்த பண நெருக்கடியை எப்படி சமாளிக்க போகிறார் என பரபரப்பான கட்சிகளுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதை தொடர்ந்து இந்த வாரம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டப்பிங் தொடரான ராமாயணம் தொடர் 8.78 டிஆர்பி புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
லிவிங் டூ கெதர் ஓகே பட் கல்யாணம் வேண்டாம்! அப்பா கமல்ஹாசனையே மிஞ்சிவிட்டாரா மகள் ஸ்ருதி!
அடுத்தடுத்து டாப் 5 இடத்தை சன் டிவி தொடர்கள் பிடித்துள்ள நிலையில், ஆறாவது இடத்தில் அண்மையில் துவங்கப்பட்ட 'அன்னம்' சீரியல் பிடித்துள்ளது. இந்த வாரம் 8.60 டிஆர்பி புள்ளிகளை இந்த தொடர் பிடித்துள்ளது. எப்போதும் டாப் 5 பட்டியலில் இடம்பிடிக்கும் விஜய் டிவியில் முக்கிய தொடரான சிறகடிக்க ஆசை சீரியல், இந்த வாரம் 8.25 டிஆர்பி புள்ளிகளுடன் 7-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மனோஜ் ஜீவாவிடம் பணம் வாங்கிய விஷயம் இப்போது தெரிய வந்துள்ளதால், அடுத்த வாரம் TRP-யில் முன்னேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதை தொடர்ந்து எட்டாவது இடத்தில், விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் உள்ளது. பாக்கியாவை விட்டு பிரிந்து ராதிகாவை திருமணம் செய்து கொண்ட கோபி, இப்போது மீண்டும் பாக்கியாவுடன் வாழ ஆசை படுகிறார். ராதிகா தான் செய்த தவறை உணர்கிறார். எனினும் ராதிகா - கோபி பிரிவு நிரந்தரமா? அல்லது ஒன்று சேர்வார்களா என்கிற எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் TRP-யில் இந்த வாரம் 6.69 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது.
அருணை கதறவிட்டு சர்பிரைஸ் கொடுத்த பிக்பாஸ்! பட் ஏமாற்றம் என்னவோ ரசிகர்களுக்கு தான்!
9-ஆவது இடத்தில், விஜய் டிவியின் மற்றொரு சூப்பர் ஹிட் தொடரான பாண்டியன் ஸ்டோர் சீரியல் உள்ளது. தங்க மயில் படித்ததாக கூறி பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு சேர இவரின் உண்மை முகம் தெரிய வருமா அல்லது இதையும் ஏதாவது சொல்லி சமாளிப்பாரா? என்பது இனி தான் தெரியவரும். பாண்டியன் ஸ்டோர் சீரியல், 6.52 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த வாரம் இறுதியாக 10-ஆவது இடத்தில் உள்ளது, சன் டிவியின் புதிய வரவான, 'ரஞ்சனி' சீரியல். அதன்படி இந்த சீரியல் 6.05 TRP புள்ளிகளை பெற்றுள்ளது.