Anirudh
தமிழ் திரையுலகில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது டாப் ஹீரோக்களாக உள்ள ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்களெல்லாம் அனிருத்தின் கைவசம் உள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்தே அனிருத்தின் வேட்டை ஆரம்பமாக உள்ளது. முதல் படமாக நடிகர் அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ் ஆக உள்ளது. மகிழ் திருமேனி இயக்கிய இப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது.
Music Director Anirudh
இதைத்தொடர்ந்து ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகிறது. இதுதவிர கமல்ஹாசனின் இந்தியன் 3, விஜய்யின் தளபதி 69 போன்ற படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார் அனி. இந்த படங்களை தவிர்த்து பாலிவுட்டில் ஷாருக்கான் நடிக்க உள்ள கிங் திரைப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க உள்ளாராம். மேலும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா படத்திற்கும் இசையமைக்க கமிட்டாகி உள்ளார் அனி.
இதையும் படியுங்கள்... நயன்தாரா உடன் லிப்லாக் காட்சியா? புது குண்டை தூக்கிப்போட்ட கவின்!
Kavin, Anirudh
இப்படி டாப் ஹீரோக்களின் படங்களுக்கு மட்டும் இசையமைக்காமல் கவின் போன்ற இளம் நடிகர்களின் படங்களுக்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். அந்த வகையில் கவின் நடிப்பில் உருவாகும் 2 படங்களுக்கும் இசையமைக்க கமிட்டாகி இருந்தார் அனிருத். அதில் ஒன்று ஹாய். இப்படத்தை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஷ்ணு எடவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
Anirudh Quit Kiss Movie
இதுதவிர கவினின் மற்றொரு படமான கிஸ் படத்துக்கு அனிருத் இசையமைப்பதாக இருந்தது.ஆனால் தற்போது அப்படத்தில் இருந்து அனிருத் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனிருத் தற்போது ஒரு படத்திற்கு ரூ.15 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். ஆனால் கிஸ் படத்தின் மொத்த பட்ஜெட்டே மிகவும் கம்மி தானாம். கேட்ட சம்பளம் கிடைக்காததால் அனிருத் அப்படத்தில் இருந்து விலகியதாகவும் அவருக்கு பதில் வேறு ஒரு இசையமைப்பாளர் இசையமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... கவின் - நயன்தாரா படத்துக்கு இரண்டே எழுத்தில் வைக்கப்பட்ட ஷார்ட் அண்ட் ஸ்வீட் டைட்டில்