தமிழ் திரையுலகில், மூன்று தலைமுறைகளாக நடித்து கொண்டிருக்கும், பிரபலமான, நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதிக்கு, மூத்த மகளாக பிறந்தவர் தான் வனிதா வனிதா விஜயகுமார்.
இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்த இவர், தன்னுடன் சேர்ந்து... நாடகம் ஒன்றில் நடித்த, நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் பிறந்த நிலையில், இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். வனிதாவின் மகன் ஆகாஷிடமும், மகள் இவரின் பாதுகாப்பிலும் உள்ளனர்.
இவர் மீண்டும் திரையுலகில் நுழைய காரணமாக அமைந்தது என்றால், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக தான். வனிதா வெள்ளித்திரையை விட சின்னத்திரை மூலமாக பட்டி தொட்டி எல்லாம் ரசிகர்கள் நெஞ்சம் நிறைந்துவிட்டார்.
தற்போது அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் ஒரு பக்கம் குவிந்து வரும் நிலையில், மற்றொருபுறம்... போதிக் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். சர்ச்சையான விஷயங்களை கூட அசால்டாக செய்யும் வனிதா, சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளரான அசீமை வீட்டிற்கு அழைத்து, அவருக்கு விருந்து வைத்து அசத்தியதோடு... ரூல்ஸை பிரேக் பண்ணுவோம் என்பது போல் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து, தற்போது மெர்லின் மன்றோவை போல் புது அவதாரம் எடுத்துள்ளார் வனிதா விஜயகுமார். வெள்ளை நிற ஹார் ஸ்டைலில்... வழவழப்பான கவர்ச்சி உடையில், இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.