சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள படம் பதான். பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாகவும், ஜான் ஆபிரஹாம் வில்லனாக நடித்திருந்த இப்படம் கடந்த ஜனவரி 25-ந் தேதி உலகமெங்கும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆனது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம், வசூலிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
அதன்படி இப்படம் ஐந்தே நாட்களில் ரூ.540 கோடி வசூலித்து இருந்தது. நேற்று வேலை நாளாக இருந்ததன் காரணமாக பதான் படத்தின் வசூல் சற்று சரிவை சந்தித்துள்ளது. இப்படம் நேற்று மட்டும் ரூ.60 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. இதன்மூலம் இப்படம் ரிலீஸான ஆறே நாட்களில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.