தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், ஜெயம் ரவி, போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை ஹன்சிகா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவருடைய நீண்ட நாள் நண்பரும், தொழிலதிபருமான சோஹேல் கதூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து, திரையுலகில் கவனம் செலுத்தி வந்த ஹன்சிகா, அவ்வப்போது கவர்ச்சி ததும்பும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
மேலும் நந்த கோபால் இயக்கும், படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளேன். ஒரு மாதம் சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்பேன் என்று தெரிவித்த ஹன்சிகா, இந்த வருடம் மட்டும் தன்னுடைய ஏழு படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதாகவும், திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் இன்றைய கால கட்டத்தில் அனைவரும் சமம். கல்யாண வாழ்க்கைக்கு பிறகு, கையில் உள்ள மோதிரம் தான் மாறி உள்ளது என தெரிவித்துள்ளார். ஹன்சிகாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.