தமிழில் 2016 ஆம் ஆண்டு வெளியான 'கிடாரி பூசாரி மகுடி' என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நக்ஷத்ரா. முதல் படத்திலேயே கிராமத்து பெண் வேடத்திற்கு பொருந்தி நடித்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காததால், அதிரடியாக சீரியலின் உள்ளே நுழைந்தார்.
இது குறித்து பேட்டியளித்த நக்ஷத்ரா, தன்னுடைய தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தின் காரணமாகவே... திடீரென தங்களின் திருமணம் நடந்ததாகவும், திருமணம் நடைபெற உள்ளது குறித்து தங்களுக்கே ஒரு வாரத்திற்கு முன்னர் தான் தெரியும் என்பது போல் கூறினார். திருமணத்திற்கு மிகவும் குறைவான நாட்களே இருந்த காரணத்தால், இதனை வெளிப்படுத்தவில்லை என கூறியிருந்தார்.
இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக, தற்போது நட்சத்திர தன்னுடைய பேபி பம்ப் தெரியும் புகைப்படத்தை வெளியிட்டு, கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து, இவருக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.