2 ஹீரோயின்கள் உள்பட படக்குழுவினர் 180 பேருடன்... தனி விமானத்தில் காஷ்மீருக்கு பறந்த தளபதி 67 டீம்

First Published | Jan 31, 2023, 12:42 PM IST

தளபதி 67 படக்குழு இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் படக்குழுவினர் 180 பேருடன் காஷ்மீர் பறந்துள்ளது . 

நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தளபதி 67. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் படம் இது என்பதால், இப்படத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.

தளபதி 67 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதுதவிர ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்தனர். அதோடு ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவு பணியாற்றுகின்றனர். நடன இயக்குனராக தினேஷ் இணைந்துள்ளார் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

Tap to resize

ஆனால் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு எதையும் வெளியிடாமல் சீக்ரெட் ஆக வைத்திருந்தனர். தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்திலேயே தொடங்கிவிட்டனர். ஏற்கனவே இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை சென்னை மற்றும் மூணாறில் நடத்தி முடித்தனர். இந்நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது.

இதையும் படியுங்கள்... நடிகை சவுந்தர்யாவின் மறுபிறவியோ... அச்சு அசல் அவரை போலவே இருக்கும் பெண்ணின் புகைப்படங்கள் வைரல்!

இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் படக்குழுவினர் 180 பேருடன் காஷ்மீர் பறந்துள்ளது தளபதி 67 படக்குழு. அதில் யார் யார் சென்றுள்ளார்கள் என்கிற விவரமும் வெளியாகி உள்ளது. அந்த லிஸ்ட்டில் நடிகைகள் திரிஷா மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்று இருந்தது. இதன்மூலம் அவர்கள் இருவரும் அப்படத்தில் இணைந்துள்ளது உறுதியாகி உள்ளது.

நாளை முதல் காஷ்மீரில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். அங்கு விஜய், சஞ்சய் தத் நடிக்கும் காட்சிகளும், விஜய் - திரிஷா இடையேயான காதல் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். இதுதவிர அடுத்த மூன்று நாட்களும் தளபதி 67 குறித்த அப்டேட்டுகளும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 'ஒரு மகள் தாய் வீட்டிற்கு வந்த உணர்வு'! திருமணத்திற்கு பின் சென்னை வந்த ஹன்சிகாவுக்கு நெகிழ்ச்சி!

Latest Videos

click me!