நயன்தாரா - சிம்புவுக்கு அப்புறம் முன்னாள் காதலர்கள் சேர்ந்து நடித்தது நானும் ராபர்ட்டும் தான் என வனிதா விஜயகுமார் சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.
நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா ஜோடிக்கு மகளாக பிறந்தவர் தான் வனிதா விஜயகுமார். இவர் தமிழில் விஜய், ராஜ்கிரண் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஒரு சில படங்களில் மட்டும் நாயகியாக நடித்த வனிதா, அதன்பின்னர் சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு இல்லற வாழ்க்கையில் நுழைந்தார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு நடிகர் ஆகாஷை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஸ்ரீஹரி என்கிற மகனும் இருக்கிறார். ஆனால் திருமணமான 7 ஆண்டுகளில் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த 2007-ம் ஆண்டு ஆகாஷை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் வனிதா விஜயகுமார்.
24
வனிதாவின் திருமண வாழ்க்கை
ஆகாஷ் உடனான மனமுறிவுக்கு பின்னர் 2007-ம் ஆண்டு ராஜன் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார் வனிதா. இந்த ஜோடிக்கு ஜோவிகா, ஜெயனிகா என இரண்டு குழந்தைகள் பிறந்தன. இந்த திருமண வாழ்க்கையும் 5 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. கடந்த 2012-ம் ஆண்டு தன்னுடைய இரண்டாவது கணவரான ராஜனையும் விவாகரத்து செய்து பிரிந்தார் வனிதா. பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டார் வனிதா. இந்த திருமண வாழ்க்கை ஒரு சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது. அவருடன் ஏற்பட்ட மோதலால், அவரை வீட்டை விட்டே அடித்து துரத்திவிட்டார் வனிதா.
34
ராபர்ட் - வனிதா காதல்
வனிதா 3 முறை திருமணமாகி அவை அனைத்துமே விவாகரத்தில் முடிந்தது. இதுதவிர அவருக்கு காதல் பிரேக் அப்பும் நடந்துள்ளது. வனிதாவும், ராபர்ட் மாஸ்டரும் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2017 வரை காதலித்து வந்தனர். இடையே ராபர்ட் இயக்கிய எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்கிற திரைப்படத்தை தயாரித்தும் இருந்தார் வனிதா. ஆனால் சில காரணங்களால் இவர்கள் காதல் திருமணத்துக்கு முன்பே முடிவுக்கு வந்தது. ராபர்ட் உடனான காதல் பிரேக் அப்பில் முடிந்த பின்னரும் அவருடன் தற்போது இணைந்து Mrs and Mr என்கிற திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார் வனிதா. இப்படம் ஜூலை 11ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை வனிதா விஜயகுமார் தான் இயக்கி உள்ளார். அவரின் மகள் ஜோவிகா இப்படத்தை தயாரித்து உள்ளார்.
Mrs and Mr படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ள வனிதா, யூடியூப் சேனல்களில் பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில், தனது முன்னாள் காதலனான ராபர்ட் உடன் பணியாற்றிய அனுபவம் பற்றி பேசி உள்ள வனிதா, சிம்பு - நயன்தாராவிற்கு பின்னர் முன்னாள் காதலர்கள் திரையில் சேர்ந்து நடித்தது நானும் ராபர்ட்டும் தான். முன்னாள் காதலன் உடன் மீண்டும் நடிப்பது மிகப்பெரிய வலி என ஃபீல் பண்ணி பேசி இருக்கிறார் வனிதா. இந்த படத்தில் ராபர்ட் வனிதாவுக்கு தாலி கட்டும் சீன் ஒன்று உள்ளதாம். அந்த சீனை மட்டும் 40 முறை எடுத்ததாக வனிதா கூறி இருக்கிறார். அவரின் இந்த பேட்டி இணையத்தில் படு வைரலாகி வருகிறது.