மினி கூப்பர் முதல் பென்ஸ் வரை; சீரியல் நடிகை ஆலியா மானசாவிடம் இத்தனை காஸ்ட்லி கார் உள்ளதா?

Published : Jul 08, 2025, 11:40 AM IST

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஆலியா மானசாவின் வியக்க வைக்கும் கார் கலெக்‌ஷன் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
16
Alya Manasa Car Collection

சின்னத்திரை சீரியல்களில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகைகளில் ஆலியா மானசாவும் ஒருவர். இவர் பிரவீன் பென்னட் இயக்கிய ராஜா ராணி சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். அந்த சீரியலில் செம்பா என்கிற கேரக்டரில் நடித்திருந்தார் ஆலியா. அவருக்கு ஜோடியாக சஞ்சீவ் என்பவர் நடித்திருந்தார். இந்த சீரியலில் காதலித்து வந்த இவர்கள் இருவரும், ஒரு கட்டத்தில் நிஜமாகவே காதலிக்க தொடங்கினர். அதன் பின்னர் குடும்பத்தினர் சம்மதத்தோடு கடந்த 2019-ம் ஆண்டு ஆலியா மானசாவை காதலித்து கரம்பிடித்தார் சஞ்சீவ். இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

26
சீரியலில் பிசியான ஆலியா மானசா

ராஜா ராணி சீரியல் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டது. அதிலும் நாயகியாக நடித்தார் ஆலியா. பின்னர் விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய ஆலியா மானசா, அதில் ஒளிபரப்பான இனியா என்கிற தொடரில் ஹீரோயினாக நடித்தார். இந்த சீரியல் 2022 முதல் 2024 வரை ஒளிபரப்பானது. கடந்த ஆண்டு இனியா சீரியல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவினார் ஆலியா மானசா. ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புது சீரியலில் நடித்து வருகிறார் ஆலியா. அந்த சீரியல் பற்றி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

36
ஆலியா மானசா கார் கலெக்‌ஷன்

ஆலியா மானசாவின் கணவர் சஞ்சீவ்வும் சீரியலில் பிசியாக நடித்து வருகிறார். ராஜா ராணி சீரியல் முடிவுக்கு வந்த பின்னர் சன் டிவியில் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கயல் சீரியலில் நாயகனாக நடிக்க தொடங்கினார் சஞ்சீவ். அந்த சீரியல் 4 ஆண்டுகளைக் கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது. சின்னத்திரை சீரியல்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான ஆலியாவும் அவரது கணவர் சஞ்சீவ்வும் தீவிர கார் பிரியர்களாம். அதனால் தங்களுக்கு பிடித்த கார்களை தொடர்ந்து வாங்குவதை இருவருமே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்களின் கார் கலெக்‌ஷன் பற்றி பார்க்கலாம்.

46
ஆலியா மானசாவின் முதல் கார்

சஞ்சீவ், ஆலியா மானசா இருவரும் முதன்முதலில் ஆல்டோ கார் தான் வைத்திருந்தார்களாம். இதையடுத்து கல்யாணம் ஆன பின்னர் பேமிலியோடு செல்ல ஒரு பெரிய கார் வேண்டும் என்பதற்காக கியா கேரன்ஸ் என்கிற காரை வாங்கி இருக்கிறார்கள். தற்போது வரை எங்காவது பேமிலி ட்ரிப் சென்றால் அந்த காரை தான் எடுத்து செல்வார்களாம். அதேபோல் குழந்தைகளை பள்ளியில் சென்று விட தற்போது வரை தங்களது ஆல்டோ காரை பயன்படுத்தி வருவதாக ஆலியா மற்றும் சஞ்சீவ் ஜோடி தெரிவித்துள்ளனர்.

56
பரிசாக வந்த மினி கூப்பர் கார்

சஞ்சீவ் - ஆலியா மானசா இருவரும் கிஃப்டாக காரை கொடுத்துக்கொண்ட சம்பவங்களும் நடந்திருக்கிறது. அதன்படி ஆலியா குழந்தை பெற்ற பின்னர் குண்டானதால், தான் 6 மாதத்தில் உடல் எடையை குறைத்துக் காட்டினாராம். அதனால் அவரது பிறந்தநாள் பரிசாக மினி கூப்பர் என்கிற சொகுசு காரை வாங்கி கொடுத்திருக்கிறார் சஞ்சீவ். அதேபோல் தன்னுடைய கணவர் சஞ்சீவ்வுக்கு பிறந்தநாள் பரிசாக மஹிந்திரா தார் காரை வாங்கி கொடுத்திருக்கிறார் ஆலியா.

66
ஆலியா மானசாவின் ட்ரீம் கார்

இதுதவிர இவர்கள் இருவரிடமும் ஒரு ஆடம்பர கார் ஒன்று உள்ளது. அது தான் மெர்சிடிஸ் பென்ஸ் ஈ கிளாஸ். இந்த கார் வாங்க வேண்டும் என்பது சஞ்சீவ் - ஆலியா இருவரின் நீண்ட நாள் கனவாம். அந்த கனவு கடந்த ஆண்டு தான் நனவானது. இந்த காரின் மதிப்பு ரூ.80 லட்சம் முதல் 1 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் தங்களிடம் இருந்த மினி கூப்பர் மற்றும் மஹிந்திரா தார் ஆகிய கார்களை விற்று தான் பென்ஸ் காரை வாங்கினாராம் ஆலியா.

Read more Photos on
click me!

Recommended Stories