Zee Tamil : மீண்டும்... மீண்டுமா? ஜீ தமிழின் 2 முக்கிய சீரியல்களின் டைமிங் திடீரென மாற்றம்!

Published : Jul 05, 2025, 02:16 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் வீரா மற்றும் கெட்டி மேளம் ஆகிய சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் திடீரென மாற்றப்பட்டு உள்ளது.

PREV
14
Zee Tamil Serials Timing Changed

விஜய் டிவி மற்றும் சன் டிவி இரண்டுமே பல வருடங்களாக போட்டி போட்டு வந்தாலும். குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்ட ஜீ தமிழ் சேனலும் அதற்கு டிஆர்பி ரேஸில் செம டஃப் கொடுத்து வருகிறது. தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய சேனலாக ஜீ தமிழ் இருந்து வருகிறது. ஜீ தமிழில் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது சீரியல்கள் தான். குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இதில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியலை தமிழ்நாட்டு இல்லத்தரசிகள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். டிஆர்பியில் நம்பர் 1 இடம் பிடித்த ஒரே ஒரு ஜீ தமிழ் சீரியலும் அதுதான்.

24
ஜீ தமிழ் சீரியல்களின் டிஆர்பி

ஜீ தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் கார்த்திகை தீபம், வீரா, சந்தியா ராகம், அண்ணா, அயலி, கெட்டி மேளம் ஆகிய சீரியல்கள் தான் டாப் 6 இடங்களை பிடித்துள்ளன. இதில் கார்த்திகை தீபம் சீரியல் 5.92 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வீரா சீரியல் 4.96 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், சந்தியா ராகம் 4.77 டிஆர்பி உடன் மூன்றாம் இடத்திலும், அண்ணா சீரியல் 4.62 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், அயலி 4.57 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும், கெட்டி மேளம் 2.99 புள்ளிகளுடன் 6ம் இடத்திலும் உள்ளன. இதில் இரண்டு முக்கிய சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

34
வீரா சீரியல் நேரம் மாற்றம்

அதில் ஒன்று தான் வீரா சீரியல். இந்த சீரியலை சிவா சேகர் இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் ஓராண்டைக் கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது. இதில் வைஷ்ணவி அருள்மொழி, அருண், சிபு சூர்யன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த சீரியல் முதலில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இதையடுத்து ஜூன் 2ந் தேதி முதல் இந்த சீரியலின் ஒளிபரப்பு நேரம் இரவு 7.30 மணிக்கு மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் இந்த சீரியலின் டைமிங்கை மாற்றி உள்ளனர். அதன்படி வருகிற ஜூலை 7ந் தேதி முதல் இரவு 7.15 மணி முதல் இரவு 8 மணி வரை 45 நிமிட தொடராக இது ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

44
கெட்டி மேளம் சீரியலின் புது டைமிங் என்ன?

அதேபோல் சீரியல் நேரம் மாற்றப்பட்ட மற்றொரு சீரியல் கெட்டி மேளம். இந்த ஆண்டு தொடங்கப்பட்ட கெட்டி மேளம் சீரியல் ஆரம்பத்தில் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஒரு மணிநேர தொடராக ஒளிபரப்பாகி வந்தது. பின்னர் 6.30 மணி முதல் 7 மணி வரை ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் வருகிற ஜுலை 7ந் தேதி முதல் 6.30 மணி முதல் 7.15 மணிவரை ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜீ தமிழில் இப்படி அடிக்கடி சீரியல்களின் ஒளிபரப்பு நேரத்தை மாற்றி வருவதால் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த நேர மாற்றம் அதன் டிஆர்பி ரேட்டிங்கையும் பாதிக்க வாய்ப்புள்ளது என கூறி வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories