மேலும் டெல்லி என் சி ஆர் சர்க்யூட் ஆரம்பம் முன்பதிவு புள்ளி விவரங்களின் படி இந்த படம் சிறந்த மதிப்பெண்ணை பெற்றுள்ளது.. ஆனால் அதே தேதியில் திரைக்கு வரும் அக்ஷய் குமார் நடித்த ரக்ஷா பந்தன் குறைந்த முன்பதிவை பெற்றுள்ளதாகவும் சுமார் 3 கோடி வரை வசூலிக்கும் என்றும் கூறப்படுகிறது. அத்வைத் சந்தன் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...உணவு டெலிவரி பாயாக தனுஷ்...வெளியானது திருச்சிற்றம்பலம் ட்ரைலர் !
நகைச்சுவை நாடக திரைப்படமான இதை அமீர்கான் ப்ரொடக்ஷன் மற்றும் Viacom 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படம் 1994 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க திரைப்படமான ஃபாரஸ்ட் கம்மிங் ரீமேக் ஆகும். நாக சைதன்யா மற்றும் அமீர்கான் உள்ளிட்டோ இதில் நடித்துள்ளனர். ராணுவ வீரரின் கதையை மையமாகக் கொண்ட லால் சிங் சத்தா 100க்கும் மேற்பட்ட இந்திய இடங்களில் படமாக்கப்பட்டது.