பிரபல இயக்குனர் சுந்தர் சி தற்போது இயக்கி வரும் காபி வித் காதல் என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெய், ஸ்ரீகாந்த், ஜீவா என மூன்று நாயகர்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஐஸ்வர்யா தத்தா, திவ்யதர்ஷினி, சம்யுக்தா, சண்முகநாதன், யோகி பாபு, ரைசா வில்சன் உள்ளிட்டோரும் ஒப்பந்தமாகியுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் ஊட்டியில் துவங்கிய இதன் படப்பிடிப்பு குறித்த புகைப்படங்களை நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டு வாழ்த்துக்களை பெற்று வந்தனர். அதோடு அவர்களது அனுபவங்களையும் பகிர்ந்தனர்.