தமிழ் சினிமாவில் நல்ல கதைகள் இல்லை" சர்ச்சையை கிளப்பிய வசந்தபாலன்...!

Published : Aug 07, 2022, 05:58 PM ISTUpdated : Aug 07, 2022, 06:01 PM IST

புதிய எழுத்தாளர்கள் கொடுக்கும் கதைகள் நல்லதாகவும், தகுதியானதாகவும் இருந்தால் திரைப்படங்களை தயாரித்து இயக்கவும் தயாராக இருப்பதாக இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

PREV
13
தமிழ் சினிமாவில் நல்ல கதைகள் இல்லை" சர்ச்சையை கிளப்பிய வசந்தபாலன்...!
vasanthabalan

வெயில், அங்காடி தெரு போன்ற வித்தியாசமான கதைகளை இயக்கி திரையுலகில் பிரபலமானவர் வசந்தபாலன். இவரின் முந்தைய படைப்பான அரவான், காவியத்தலைவன் உள்ளிட்ட படங்களும் நல்ல வரவேற்பை  பெற்றது. இவர் சமீபத்தில் ஜெயில் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்திருந்தார். ஆக்சன் திரில்லர் படமான இதில் அறிமுக நாயகி அபர்ணதி நடித்துள்ளார், இவர்களுடன் ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கடந்த டிசம்பர் 9ஆம் தேதி வெளியான இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...ஹாலிவுட் பிரபலத்தை களமிறக்கிய பொன்னியின் செல்வன்...வெளியான புதிய அப்டேட்

23
vasanthabalan

இந்நிலையில் இயக்குனர் வசந்தபாலன் சமீபத்தில் நடைபெற்ற குறும்பட விழாவில் பேசிய இருப்பது வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வசந்த பாலன், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான விஷயம் இல்லை. அது மரியாதை என்று கூறியுள்ளார். அதோடு ஹோலிவுட்டில் நல்ல கதை எழுதுபவர்கள் இல்லாததால் இந்த நிலை நிலவுகிறது. இதனால் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக சரிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை காண வருகை தந்த நடிகர் மோகன்லால்...!

33
vasanthabalan

அதோடு மலையாள படங்கள் திரைக்கு தகுதியானவை அவற்றில் கதை ஆசிரியர்கள் கொண்டாடப்படுகிறார்கள் என்பதற்கு வசந்தபாலன் ஒரு உதாரணத்தை கூறினார். அவர்கள் முதலில் கதை மற்றும் திரைக்கதையை இறுதி செய்கிறார்கள். பின்னர் முக்கிய நடிகராக மம்முட்டி அல்லது மோகன்லால் நடிக்க வேண்டுமா என்பதை உறுதி செய்வார்கள் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு...தயாரிப்பாளர்கள் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு..அரசியல் சூழ்ச்சியா? கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா?

தொடர்ந்து பேசிய வசந்தபாலன்,  எழுத்தாளர்கள் கொடுக்கும் கதைகள் நல்லதாகவும், தகுதியானதாகவும் இருந்தால் திரைப்படங்களை தயாரித்து இயக்கவும் தயாராக இருப்பதாகவும் கூறிய இயக்குனர், இத்துறையில் புதிய எழுத்தாளர்களை வரவேற்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories