கடற்படைக்காக ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை கொச்சி கப்பல் கட்டும் தளம் உருவாக்கியுள்ளது. முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த போர்க்கப்பலை இந்திய கடற்படையிடம் கொச்சி கப்பல் கட்டும் தளம் வழங்கி உள்ளது. அடுத்த மாதம் முறைப்படி நாட்டுக்கு அர்பணிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த கப்பலுக்கு ஐ.என்.எஸ். விக்ராந்த் என பெயரிடப்பட்டுள்ளது.
25
actor mohanlal visited the warship INS vikrant
இந்த கப்பலை நடிகர் மோகன்லால் சமீபத்தில் பார்வையிட்டுள்ளார். இதற்காக கொச்சி கப்பல் கட்டும் தளத்திற்கு வருகை தந்த நடிகர் மோகன்லாலை கடற்படை மற்றும் கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் கடற்படை வீரர்களுடன் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை சுற்றி பார்த்தார் மோகன்லால்.
அதன் பின்னர் கடற்கரை வீரர்கள் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்களுடன் நடிகர் கலந்துரையாடினார். இது தொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள நடிகர் மோகன்லால், 'இந்திய கடற்படையை மேலும் பலப்படுத்தும் நோக்கில் ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கப்பல் வெற்றி பெற வாழ்த்துக்கள் என தெரிவித்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
எண்பதுகளின் துவக்கத்திலிருந்து தற்போது வரை சூப்பர் நாயகனாக கலக்கி வரும் மோகன்லால் மலையாளத்தில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் பிரபலமானவர். இவர் நடிப்பில் தற்போது அலோன், ஓலாவும் தேராவும், ராம் பார்ட் 1 உள்ளிட்ட பல படங்கள் தயாரிப்பில் உள்ளன.
55
actor mohanlal visited the warship INS vikrant
சமீபத்தில் மோகன்லால் நடித்த ஆராட்டு படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. முன்னதாக பிரம்மாண்ட தயாரிப்பான மரக்காயர் அரபிக் கடலின் சிங்கம் படம் ஃபேன் இந்தியா படமாக வெளியாகி விமர்சன ரீதியில் வெற்றி கண்டது.